வெறும் ரூ.1000 முதலீட்டில் ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறலாம்.. உடனே நீங்களும் ஜாயின் பண்ணுங்க..!

By Nanthini on ஆனி 4, 2025

Spread the love

இன்றைய காலகட்டத்தில் தங்கள் பணத்தை பாதுகாப்பான மற்றும் லாபகரமான திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். அதற்கு தபால் அலுவலக பிக்சட் டெபாசிட் திட்டம் சிறந்ததாக இருக்கும். இந்திய அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் உங்களுடைய பணத்திற்கு பாதுகாப்பை உறுதி செய்வது மட்டுமல்லாமல் கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களுடன் உங்களுடைய சேமிப்பை வளர்க்கவும் உதவுகின்றது. தபால் அலுவலக பிக்சட் டெபாசிட் திட்டம் நடப்பு 2025 ஆம் ஆண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபத்தை கொடுத்து வருகின்றது. இதில் நான்கு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக 12 லட்சம் ரூபாய் பெற முடியும். தபால் அலுவலக பிக்சட் டெபாசிட் திட்டம் இந்திய அரசால் உத்திரவாதம் அளிக்கப்படுகின்றது.

இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டில் 6.90 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை வட்டி விகிதங்களை வழங்குகின்றது. நீங்கள் ஒரு வருடம் முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலான கால அளவை தேர்வு செய்து கொள்ளலாம். அதேசமயம் வெறும் ஆயிரம் ரூபாயிலிருந்து முதலீடு செய்ய தொடங்கலாம். நீங்கள் விரும்பும் அளவுக்கு இந்த திட்டத்தில் முதலீடு செய்து கொள்ள முடியும். ஐந்து ஆண்டு நிலையான வைப்புத் தொகைகள் பிரிவு 80 சி இன் கீழ் வரி விலக்கு பெற முடியும். தபால் அலுவலக பிக்சட் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் நான்கு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வதன் மூலமாக 12 லட்சம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

   

அதாவது ஆண்டுக்கு 7.50 சதவீதம் என்ற வட்டி விகிதத்தில் 5 ஆண்டு நிலையான வைப்புத் தொகையில் 4 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் ஈட்டும் வட்டியை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும். அப்போது உங்களுடைய முதலீடு சுமார் 15 ஆண்டுகளில் 12 லட்சம் ரூபாயாக மாறும். தபால் நிலையத்தில் பிக்சர் டெபாசிட் கணக்கு திறப்பது மிகவும் எளிது தான். அதற்கு அருகில் உள்ள தபால் நிலையத்தை பார்வையிட வேண்டும். ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு திறப்பு படிவத்தை நிரப்பி தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்து திட்டத்திற்கான பாஸ்புக்கை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.