தில்லானா மோகனாம்பாள் “நலந்தானா” பாடலில் இப்படி ஒரு விஷயம் மறைஞ்சிருக்கா?.. அட இது தெரியாம போச்சே..!

By Nanthini on ஆனி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தன்னுடைய பாடல்கள் மூலமாக இன்றும் நிலைத்திருக்கும் கவியரசர் கண்ணதாசன் அறிஞர் அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாத போது தன்னால் நலம் விசாரிக்க முடியவில்லை என்ற ஏக்கத்தில் ஒரு பாடலை எழுதியிருந்தார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். சினிமாவில் கவிஞர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என்று பன்முக திறமையுடன் வலம் வந்த கண்ணதாசன் மனித உணர்ச்சிகள் அனைத்துக்கும் தன்னுடைய பாடல்கள் மூலம் உயிர் கொடுத்தவர். இவர் எழுதிய பாடல்கள் காலம் கடந்தும் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து உள்ளது. சினிமாவில் முத்திரை பதித்தது போல அரசியலிலும் முத்திரை பதிக்க முயற்சி செய்த கண்ணதாசன் அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொண்டார்.

அறிஞர் அண்ணாவுக்கு பாடல் வரிகளின் மூலம் கேட்ட கேள்வி.. கண்ணதாசனின் அசாத்திய திறமை - Cinemapettai

   

ஆரம்பத்தில் எம்ஜிஆர், கருணாநிதி மற்றும் சிவாஜி ஆகியோருடன் திமுகவில் அறிஞர் அண்ணாவின் தலைமையில் இயங்கி வந்த கண்ணதாசன் ஒரு கட்டத்தில் அதிலிருந்து விலகி தனியாக கட்சி தொடங்கினார். பிற மாதங்கள் அந்த கட்சியை வழிநடத்திய கண்ணதாசன் அதன்பிறகு தனது கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைத்து விட்டு முன்னாள் முதல்வர் காமராஜுடன் தன்னை காங்கிரஸ் கட்சியை நினைத்துக் கொண்டார். இந்த காலகட்டத்தில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில் முதல்வராக இருந்த அறிஞர் அண்ணாவுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.

   

Thillana Mohanambal: மறக்க முடியுமா சிவாஜியை திணறவைத்த படம்.. 'தில்லானா மோகனாம்பாள்' ரிலீஸான நாள் இன்று!

 

இதை கேள்விப்பட்ட கண்ணதாசன் அவரிடம் நலம் விசாரிக்க முடியவில்லை என்று சோகமாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் இயக்குனர் ஏபி நாகராஜன் தன்னுடைய தில்லானா மோகனாம்பாள் படத்திற்கு ஒரு பாடல் கேட்டுள்ளார். பாடதற்காக சூழ்நிலையை இயக்குனர் சொன்னதும் அது தனது இப்போதைய நிலைக்கு ஒத்துப் போகிறதே என்று யோசித்த கண்ணதாசன் அந்த பாடலை சற்று நேரத்தில் எழுதி முடித்தார். அந்தப் பாடல் தான், சிவாஜியிடம் பத்மினி நலம் விசாரிப்பது போன்று அமைந்த நலம்தானா என்ற பாடல். இந்தப் பாடல் இன்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுபோலவே முதல்வராக இருந்த அண்ணாவுக்கு கண் பட்டுவிட்டது என்று நலம்தானா பாடலில் மறைமுகமாக கண்ணதாசன் சொல்லி இருப்பார்.