தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் குடும்ப உறவுகளின் உணர்வுகளை மையமாகக் கொண்ட சீரியல்களை உருவாக்குகின்ற சேனல்களில் சிறப்பானதாக சன் டிவி விளங்குகிறது. எந்த காலத்திலும் தொடர்ந்து டிஆர்பி பட்டியலில் மேலே இடம் பிடித்து வரும் சன் டிவி தற்போது தனது ரசிகர்களுக்காக ஒரு புதிய தொடர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஆர்பி ரேட்டிங்கில் மக்களை கவரும் கதைக்களத்தை கொண்டு பழைய சீரியல்களை முடிவுக்கு கொண்டு வந்து புதுப்புது சீரியல்களை தொடங்கும் சன் டிவி தற்போது வினோதினி என்ற புதிய தொடரை கொண்டு வர உள்ளது.

இந்த தொடரின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இருந்த நிலையில் குடும்ப உணர்வுகளுடன் கூடிய கதைக்களம் மூலம் ரசிகர்களை கட்டி போட்ட சன் டிவி தற்போது புதிய நம்பிக்கையுடன் வினோதினி என்ற தொடரை கார்த்திகை தீபம் சீரியல் புகழ் அரத்திகாவை கொண்டு தொடங்குகிறது. இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் அடுத்ததாக ஒரு புதிய சீரியலையும் சன் டிவி களம் இறங்குகிறது. அதாவது சாந்தி நிலையம் என்ற சீரியலுக்கு பதிலாக துளசி என்ற டைட்டிலை மாற்றிவிட்டு புதிதாக வரப்போகிறது.

இந்த சீரியலில் நடிக்கப் போகும் கதாநாயகி கதாநாயகன் யார் என்றால் ஏற்கனவே சில நாடகங்களில் சப்போர்ட்டிங் கேரக்டரில் நடித்தவர்கள் தான். அதாவது சுந்தரி சீரியலில் பழனி கேரக்டரில் நடித்த அருண்குமார் ஹீரோவாக நடிக்கப் போகிறார். தற்போது இவர் சிங்க பெண்ணே சீரியலில் மித்ராவை ஒரு தலைப்பட்சமாக காதலிக்கும் அரவிந்த் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இவர் முதல்முறையாக ஹீரோவாக துளசி என்ற சீரியலில் கமிட் ஆகியுள்ளார். அடுத்து இவருக்கு கதாநாயகியாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தென்றல் வந்து என்னை தொடும் மற்றும் ஈரமான ரோஜாவே 2 சீரியல்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த சோனிடா ஸ்ரீகாந்த் நடிக்க உள்ளார். இந்த சீரியலை தொடர்ந்து பராசக்தி மற்றும் வீர அனுமன் என்ற சீரியலும் வரப்போகிறது. இப்படி பழைய சீரியல்களை ஒவ்வொன்றாக முடிவுக்கு கொண்டுவந்த புது சீரியல்களை கொண்டுவர சன் டிவி தற்போது தயாராகிவிட்டது.
