தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சிவகார்த்திகேயன். மிமிக்ரி ஆர்கெஸ்ட் ஆக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய இவர் தற்போது முன்னணி நடிகர்கள் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளார். அதற்கு காரணம் இவருடைய அயராத உழைப்பு மட்டும்தான். இறுதியாக அமரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது பராசக்தி திரைப்படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்ற வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்திற்குள் முடித்துவிட்டு அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படத்தை வெளியிடப்பட குழு திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சிவ கார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் மதராசி திரைப்படத்திலும் நடித்து வருகின்றார். சிவகார்த்திகேயனின் 23வது படமாக தயாராகும் இந்த படத்தின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் குட் நைட் இயக்குனர் விநாயக சந்திரசேகர் இயக்கத்தில் தனது 24 ஆவது படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. முதலில் தான் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவக்கார்த்திகேயன் நடிக்க இருந்ததாக கூறப்பட்ட நிலையில் சிபி சக்கரவர்த்திக்கு நாணியை வைத்து படமெடுக்கும் வாய்ப்பு வந்ததால் அவருக்கு பதில் சிவகார்த்திகேயன் 24 ஆவது படத்தை விநாயகர் சந்திரசேகர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது சிவகார்த்திகேயனின் 24 வது திரைப்படம் எமோஷனலான ஒரு கமர்சியல் படமாக தயாராக உள்ள நிலையில் அப்பா மற்றும் மகன் பற்றிய படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்த படத்தில் அப்பா ரோலில் மோகன்லால் நடிக்க உள்ளதாகவும் மோகன்லாலுக்கு மகனாக சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
