விடாமுயற்சியை விடுங்க குட் பேட் அக்லி படத்தால் லைகாவுக்கு இவ்வளவு நஷ்டமா?.. பிரபலம் சொன்ன ஷாக்கிங் தகவல்..!

By Nanthini on வைகாசி 10, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித் தனித்துவமான பண்பை கொண்டவர். சினிமாவில் நடிப்பதோடு தன்னுடைய வேலை முடிந்து விட்டது என்று நினைக்கக் கூடியவர் தான் அஜித். கடந்த சில வருடங்களாகவே எந்த வித டிவி சேனல்களிலும் அல்லது தனிப்பட்ட முறையிலும் youtube சேனல்களுக்கு கூட இவர் பேட்டியளிப்பதை தவிர்த்து வருகின்றார். அதனைப் போலவே பட விளம்பர நிகழ்ச்சிகளிலும் கூட அஜித் பங்கேற்பது கிடையாது. சினிமாவை தாண்டி தனக்கு பிடித்த விஷயங்களை செய்து வருவதில் ஆர்வம் காட்டக் கூடியவர். கார் பந்தயங்கள் மூலம் அவரது கனவை நிறைவேற்றும் வேளையில் முழு ஈடுபாட்டோடு செய்து கொண்டிருக்கின்றார். அதில் தொடர்ந்து பல சாதனைகளையும் செய்து வருகிறார்.

Ajith Kumar : "நான் தண்ணி ஊத்தி வளத்த வீட்டுமரம் இல்ல..." - அஜித் பேசிய 10  சிறந்த வசனங்கள்

   

சினிமா மற்றும் கார் பந்தயத்தில் சிறந்து விளங்கக்கூடிய இவரின் செயலை பாராட்டு வகையில் சமீபத்தில் குடியரசு தலைவர் திரௌபதி இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கிய கௌரவித்தார். இதனிடையே அஜித் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. சுமார் இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு அஜித் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாததால் படு தோல்வியை தழுவியது. சுமார் 280 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருந்தது.

   

விடாமுயற்சி விமர்சனம்: நாயக பிம்பம் தவிர்த்த அஜித்; சஸ்பென்ஸ் த்ரில்லராக  மிரட்டுகிறதா இந்த முயற்சி? | ajith kumar trisha arjun starrer vidamuyarchi  movie review - Vikatan

 

படம் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிலீசுக்கு முன்பு லைகாவுக்கு சுமார் 124 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அந்த நஷ்டத்தை ஈடு கட்ட முடியும் என படத்தை ரிலீஸ் செய்த நிலையில் இறுதியாக எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் பெரும் நஷ்டத்தை லைகா நிறுவனம் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி ரிலீசானது. விடாமுயற்சி தோல்வியால் ரசிகர்கள் துவண்டு கிடந்த நிலையில் இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது. அஜித் ரசிகர்கள் அனைவரும் கொண்டாடும் வகையில் இந்த திரைப்படம் அமைந்திருந்தது.

அஜித்தின் 'குட் பேட் அக்லி' ஏப்.10-ல் ரிலீஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு | Ajith  Kumar Good Bad Ugly Release on Apr 10 - Official Announcement -  hindutamil.in

இந்த படம் சுமார் 320 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட நிலையில் நடிகர்களுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் மட்டுமே 197.65 கோடி ஆகும். ஆக மொத்தம் படத்தை எடுப்பதற்கு மட்டும் 65.35 கோடி செலவு செய்தது லைகா நிறுவனம். சாட்டிலைட் உரிமை 32 கோடி மற்றும் டிஜிட்டல் உரிமை netflix நிறுவனத்திற்கு 95 கோடிக்கு விற்கப்பட்டது. இசை உரிமை மட்டும் பத்து கோடிக்கு விற்பனையானது. ஆக மொத்தம் வரவு கணக்கு 254 கோடியாக இருக்க படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் 66 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது.

குட் பேட் அசிங்கமான டீஸர்: ஆதிக் ரவிச்சந்திரனின் கேங்ஸ்டர் ஆக்ஷன் தமிழ்  திரைப்படம், இசை விமர்சனங்கள் மற்றும் செய்திகளில் அஜீத் குமார் ...

ஆனால் தயாரிப்பு நிறுவனம் சார்பாக எந்த ஒரு தகவலும் வெளியாகாமல் இருந்த நிலையில் சமீபத்தில் திருப்பூர் சுப்பிரமணியன் அளித்த பேட்டியில் விடாமுயற்சி திரைப்படம் பலத்த நஷ்டத்தை சந்தித்த நிலையில் குட் பேட் அக்லி படமும் மிகப்பெரிய நஷ்டத்தை தான் சந்தித்தது. இதனை தயாரிப்பாளர் வெளிவிடும் வரை யாராலும் சரியான நஷ்டத்தை கணித்து கூறி விட முடியாது என்று கூறியுள்ளார். ஆக மொத்தத்தில் அஜித் நடிப்பில் இறுதியாக வெளியான இரண்டு திரைப்படங்களுமே பெரும் நஷ்டத்தை தான் லைகாவுக்கு கொடுத்துள்ளது.