மதுரையில் எம்ஜிஆரை மறைமுகமாக தாக்கி பேசிய ஜெமினி கணேசன் பட இயக்குனர்.. மறக்கமுடியாத பதிலடி கொடுத்த ரசிகர்கள்..!

By Nanthini on வைகாசி 8, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

அதிக வசூலை வாரி குவித்த எம்ஜிஆரின் முதல் படம்.. 70-களிலேயே வேட்டையாடிய கலெக்ஷன் - Cinemapettai

   

அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார்.  இப்படி சினிமாவிலும் அரசியலிலும் நிலை நாட்டிய எம்ஜிஆர்க்கு தமிழ்நாடு முழுவதும் தீவிர ரசிகர்கள் இருந்தனர். இப்படியான நிலையில் தமிழகத்திலேயே இரண்டாவது மிகப்பெரிய தியேட்டராக கருதப்பட்டது மதுரையில் அமைந்திருந்த தங்கம் தியேட்டர் தான்.

   

புயலில் சிக்கிய ஜெமினி கணேசன் - சாவித்திரி... 56 ஆண்டுகளுக்கு முன் தனுஷ்கோடியில் நடந்தது என்ன? | what happened when Gemini Ganesan and Savitri were caught in dhanushkodi ...

 

 

அன்றைய காலகட்டத்தில் குடும்ப கதையின் நாயகன் என்று அழைக்கப்பட்ட கே எஸ் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஜெமினி கணேசன் நாயகனாக நடித்த பணமா பாசமா என்ற திரைப்படம் தங்கம் தியேட்டரில் வெளியாகி 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது. அந்த திரைப்படத்தின் வெற்றி விழாவிற்கு தங்கம் தியேட்டருக்கு நேரடியாக வந்திருந்த இயக்குனர் கே எஸ் கோபாலகிருஷ்ணன், என்னுடைய படமான பணமா பாசமா திரைப்படம் பல வசூல் சக்கரவர்த்திகளின் சாதனையை முறியடித்து விட்டது என்று எம்ஜிஆரை மறைமுகமாக தாக்கி பேசியிருந்தார்.

குடும்பக் கதைகளின் நாயகன் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன்! | Ks gopalakrishnan the hero of family stories - kamadenu tamil

பேசி முடித்துவிட்டு அவர் வெளியே வந்த போது சென்னையிலிருந்து அவர் மதுரைக்கு வந்திருந்த கார் அடித்து சுக்கு நூறாக நொறுக்கப்பட்டிருந்தது. இந்த விஷயம் தொடர்பாக தியேட்டர் உரிமையாளரிடம் இயக்குனர் கேட்டபோது மதுரையை பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ரசிகர்கள் தான் அதிகம், எம்ஜிஆரை போஸ்டரில் பார்த்தால் கூட பீடி குடிக்கும் ரசிகர் அதனை மறைத்து விட்டு தான் செல்வார். அந்த அளவிற்கு மரியாதை கொடுக்கும் மதுரை ரசிகர்கள் மத்தியில் எம்ஜிஆரை தாக்கி பேசினால் சும்மா விடுவார்களா. உடனடியாக ஊருக்கு கிளம்புங்கள் என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தாராம்.