தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

இப்படியான நிலையில் எம்ஜிஆர் 1972 ஆம் ஆண்டு அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பிப்பதாக அறிவித்த கையோடு சென்னையில் இருந்து மதுரைக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸில் புறப்பட்டார். எம்ஜிஆர் வந்து கொண்டிருந்த அந்த ரயில் திண்டுக்கல் வரை சரியான நேரத்திற்கு சென்று கொண்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக திண்டுக்கல் ரயில் நிலையத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் நின்று கொண்டிருந்தனர். எம்ஜிஆரை பார்த்த பிறகு தான் அங்கிருந்து செல்வோம் என்று ஒவ்வொரு ரசிகர்களும் வெறியோடு காத்துக் கொண்டிருந்தனர். திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ரயில் செல்லும் வழியில் சிக்னல்கள் எதுவும் வேலை செய்யவில்லை.

மதுரை வரை லட்சக்கணக்கான தொண்டர்கள் ரயில் பாதையில் நின்று கொண்டிருப்பதை அறிந்த எம்ஜிஆர், ரயிலில் இருந்து இறங்கி காரில் சென்று விடலாமா என்று ரயில்வே அதிகாரியிடம் கேட்டபோது ஐயா நீங்கள் ரயிலில் இல்லை என்று தெரிந்தால் தொண்டர்கள் ரயிலை அடித்து நொறுக்கி விடுவார்கள் அதனால் நீங்கள் ரயிலில் வரவேண்டும் என்று கூறியுள்ளனர். திண்டுக்கல்லில் இருந்து மதுரைக்கு ஒரு மணி நேரத்தில் வர வேண்டிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் 10 மணி நேரம் எடுத்துக் கொண்டது. அவ்வளவு தொண்டர்களின் ஆரவாரத்தோடு எம்ஜிஆர் மதுரைக்கு வந்து கட்சி ஆரம்பித்தார். இந்திய ரயில்வே வரலாற்றிலேயே ஒரு ரயில் குறைந்த தூரத்தை கடக்க அதிக நேரம் எடுத்துக்கொண்ட நிகழ்வு அதுவே முதலும் கடைசியுமாக பார்க்கப்பட்டது.
