திடீரென தற்கொலைக்கு முயன்ற கயல் சீரியல் நடிகை.. வெளியான ஷாக்கிங் தகவல்..!

By Nanthini on வைகாசி 2, 2025

Spread the love

திரையுலகை பொருத்தவரையில் பெண் நடிகைகள் மற்றும் துணை நடிகைகள் கடினமாக உழைத்த தான் முன்னேறி வருகிறார்கள். ஸ்டார் அந்தஸ்து பெற்ற நடிகைகளின் எண்ணிக்கை குறைவு தான். ஒரு சில நடிகைகள் வளர்ந்து வந்தாலும் அந்த சமயத்தில் குடும்ப சிக்கல் மற்றும் வேறு ஏதாவது பிரச்சனை காரணமாக தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இது போன்ற செய்திகள் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை தருகிறது. சின்னத்திரையில் நடிகர் சாய் பிரசாந்த் தொடங்கி விஜே சித்ரா வரை இது போன்ற அதிர்ச்சிகரமான முடிவுகளை எடுத்த எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது.

கயல் சீரியல் நடிகர், நடிகைகளுக்கு எவ்வளவு சம்பளம்? யாருக்கு அதிகம்? சைத்ரா  ரெட்டிக்கா சஞ்சீவுக்கா? | Do you know Kayal Serial actor and actresses are  getting how much ...

   

இந்த நிலையில் சன் டிவி மற்றும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல்களில் நடித்து வந்த நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கயல் சீரியலில் நடித்து வந்த அமுதா சென்னை சாலிகிராமம் பகுதியில் வசித்து வந்த நிலையில் வீட்டிற்குள் இருந்த இவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. அருகில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பெயரில் வீட்டிற்குள் சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். பாத்ரூம் சுத்தம் செய்ய பயன்படுத்தும் திரவத்தை குடித்து அமுதா தற்கொலைக்கு முயற்சி செய்து உள்ளார். அதன்பிறகு அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்த நிலையில் அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

   

சின்னத்திரை நடிகை அமுதா தற்கொலை முயற்சி | Small screen actress Amudha  attempts suicide

 

அவர் எந்த காரணத்தால் தற்கொலைக்கு முயன்றார் என்ற காரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 28 வயதான அமுதா சாலிகிராமம் பகுதியில் கணவருடன் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. கருத்து முரண்பாடு காரணமாக பேசாமல் இருந்து வந்ததாகவும் இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அமுதா பினாயில் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகின்றது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.