மூதாட்டி சொன்ன வார்த்தை.. பொது இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுத எம்.ஜி.ஆர்.. அப்படி என்ன நடந்தது தெரியுமா..?

By Nanthini on வைகாசி 2, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்று பன்முக திறமை கொண்ட கலைஞராக வலம் வந்தவர் தான் எம்ஜிஆர். இவர் அரசியலிலும் கலக்கினார். முதலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் எம்ஜிஆர் இருந்தார். கடவுள் மறுப்பு கொள்கை கொண்ட இந்த கட்சியில் இருந்து கொண்டு மூகாம்பிகை கோவிலுக்கு சென்றது, மருதமலை கோவிலுக்கு சென்றது என்று எம்ஜிஆர் கட்சியில் சில சலசலப்புகளை சந்தித்து இருந்தாலும் படப்பிடிப்பில் சக நடிகையின் மூலமாக ஒரு சம்பவத்தை எதிர்கொண்டார். நாடக நடிகரான எம்ஜிஆர் 1936 ஆம் ஆண்டு சதிலீலாவதி என்ற திரைப்படம் மூலமாக தான் துணை நடிகராக சினிமாவில் நுழைந்தார்.

அதிக வசூலை வாரி குவித்த எம்ஜிஆரின் முதல் படம்.. 70-களிலேயே வேட்டையாடிய கலெக்ஷன் - Cinemapettai

   

அதன்பிறகு தொடர்ந்து பல படங்களில் துணை நடிகர்கள் மற்றும் இரண்டாவது நாயகன் என அழைத்து வந்த எம்ஜிஆர் 10 ஆண்டு இடைவேளைக்கு பிறகு 1947 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார். முதல் படத்தில் இவருடன் நடிக்க முடியாது என்ற சில நடிகைகள் மறுத்த சம்பவமும் பல நடந்து உள்ளது. பல தடைகளை கடந்து தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்ட எம்ஜிஆர் இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் தனக்கு என்று தனிமுத்திரையை பதித்தார். இவர் முதல் படமான நாடோடி மன்னன் என்ற படத்தை இயக்கி தயாரித்த நிலையில் பெரிய வெற்றியை பெற்று தந்தது. அடுத்தடுத்து பல வெற்றிகளை கொடுத்த எம்ஜிஆர் தன்னுடைய படங்கள் தொடர்பான முடிவை தானே எடுக்கும் நிலைக்கு உயர்ந்தார்.

   

எம்ஜிஆர் 100 | 84 - தமிழ் வளர்த்தோன்! | எம்ஜிஆர் 100 | 84 - தமிழ் வளர்த்தோன்! - hindutamil.in

 

இப்படியான நிலையில் எம்ஜிஆர் அரசியலில் நுழைந்து முதலில் திமுகவில் இருந்த நிலையில் அதன் பிறகு திமுகவிலிருந்து விலகி அதிமுக என்ற புதிய கட்சியை ஆரம்பித்தார். அந்த காலகட்டத்தில் எம்ஜிஆர் கடன் சுமையால் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்பட்டு இருப்பதாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகி இருந்தது. அப்போது தனது கட்சியின் கொள்கைகளை பரப்புவதற்காக எம்ஜிஆர் சுற்றுப்பயணம் சென்றார். அந்த சமயத்தில் எம்ஜிஆரை சந்திக்க வேண்டும் என்று 80 வயது மூதாட்டி ஆவலுடன் கேட்க எம்.ஜி.ஆரும் அந்த மூதாட்டியை சந்தித்தார். அப்போது நான் உங்களுக்கு எந்த வகையில் உதவ வேண்டும் என்று எம்ஜிஆர் அந்த மூதாட்டியை பார்த்து கேட்க அந்த மூதாட்டி தான் கையில் வைத்திருந்த சுருக்கு பையை எடுத்து அதிலிருந்த பணத்தை எம்ஜிஆரின் கையில் திணித்தார்.

எம்ஜிஆர் இன்றும் ஏன் பேசும்பொருள் ஆனார்? | Why MGR is still the talk of the town today - hindutamil.in

தம்பி நீ கட்சி ஆரம்பித்து கடன் சுமையால் இருப்பதாக செய்திகள் மூலமாக நான் அறிந்தேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நீ அரசியலுக்கு வந்து விட்டாய் பணத்தைப் பற்றி நீ கவலைப்படாதே மாதம் என்னால் முடிந்த பணத்தை நான் உனக்கு தருகிறேன் என்று அந்த மூதாட்டி கூறியுள்ளார். இந்த வார்த்தையை கேட்டதும் எம்ஜிஆர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதுள்ளார். அதன் பிறகு அந்த மூதாட்டியை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்த எம்ஜிஆர் அவருக்கு ஒரு மகனாக பத்தாயிரம் ரூபாய் பணத்தை கொடுத்து உதவியுள்ளார். இப்படி மக்களால் நேசிக்கப்பட்ட தலைவர்களில் எம்ஜிஆருக்கு எப்போதுமே தனி இடம் உண்டு.