கழட்டிவிட்ட பாலிவுட் சூப்பர் ஸ்டார்.. விடாமுயற்சி தோல்வியால் மகிழ் திருமேனிக்கு இப்படி ஒரு நிலையா..?

By Nanthini on சித்திரை 24, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவிற்கு மகிழ் திருமேனி. இவருடைய இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் படு தோல்வியை சந்தித்தது. அஜித் திரையில் வந்தால் மட்டுமே போதும் என்று பெரும்பாலும் நினைத்தவர்கள் தான் அஜித் ரசிகர்கள். அப்படிப்பட்ட அவர்களுக்கே விடாமுயற்சி திரைப்படம் வெறுப்பை உண்டாக்கியது. இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்த நிலையில் ட்ரெய்லர் கூட மிகவும் ஆர்வத்தை தூண்டும் வகையில் தான் இருந்தது.

விடாமுயற்சி'யில சூப்பர் ஹீரோவை எதிர்பார்க்காதீங்க! - மகிழ் திருமேனி சிறப்பு  நேர்காணல் | Magizh Thirumeni Special Interview - hindutamil.in

   

ஆனால் இந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை. லைகா நிறுவனத்திற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்த திரைப்படம் ஆகவும் அமைந்தது. விடாமுயற்சி திரைப்படத்தின் தோல்வியை தொடர்ந்து மகிழ் திருமேனிக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை என கூறப்பட்டு வந்தது. இருந்தாலும் இவர் அமிதாப்பச்சனை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கப் போவதாக செய்தி வெளியாகி இருந்தது. அதாவது விடாமுயற்சி திரைப்படம் உருவாகிக் கொண்டிருந்த போதே தனது அடுத்த படத்திற்காக அமிதாப்பச்சனை மகிழ் திருமேனி அணுகியுள்ளார். அப்போது அவர் கூறிய கதை அமிதாப் பச்சனுக்கு மிகவும் பிடித்துப் போனது.

   

பாலிவுட் பக்கம் திரும்பிய மகிழ் திருமேனி…. 'விடாமுயற்சி' படத்தால் ஏற்பட்ட  சிக்கல்!

 

எப்படியும் விடாமுயற்சி திரைப்படத்திற்கு பிறகு அமிதாப் பச்சனை வைத்து படம் எடுத்துவிடலாம் என்று மகிழ் திருமேனி ஆவலோடு இருந்தார். ஆனால் விடாமுயற்சி வெளிவந்து படு தோல்வியை சந்தித்தது. இதனால் மகிழ் திருமேனியால் அமிதாப் பச்சனை எவ்வளவு முயற்சி செய்தும் நெருங்க முடியவில்லை. ஒரு சந்திப்புக்கு கூட அவர் வாய்ப்பு வழங்காமல் விலகிச் சென்று கொண்டிருக்கிறார். விடாமுயற்சி தோல்வியால் இவருடன் படம் செய்ய வேண்டாம் என்று ஒருவேளை அமிதாப்பச்சன் முடிவு செய்து விட்டாரா என்று தெரியவில்லை. இந்தச் செய்தியை கேள்விப்பட்ட கோலிவுட் வட்டாரங்கள் மகிழ் திருமேனிக்கு இப்படி ஒரு நிலையாய் என கூறுகின்றனர்.