பொதுவாக சன் டிவி சீரியல்களுக்கு மக்களிடம் தனி வரவேற்பு உண்டு. ஏனென்றால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை மக்களுக்கு எந்த மாதிரியான கதைக்களத்தை கொடுத்தால் மக்கள் விரும்பி பார்ப்பார்கள் என்றதற்கு ஏற்றது போல சன் டிவியில் உள்ள சீரியல்கள் அனைத்தும் வந்து கொண்டிருக்கிறது. அதனால் சன் டிவியில் சுமார் 19 சீரியல் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் அடுத்தடுத்த சீரியல்களும் வரிசை கட்டி காத்திருக்கின்றன. அதன்படி காலையில் மட்டும் 11 சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் குடும்ப தலைவிகள் அனைவரும் அனைத்து சீரியல்களையும் விரும்பி பார்க்கின்றனர்.

இருந்தாலும் டிஆர்பி ரேட்டிங் பொருத்தவரையில் மாலை நேரத்தில் ஒளிபரப்பாக கூடிய சீரியல்கள் தான் அதிக புள்ளிகள் பெற்று டாப் இடத்தை பிடிக்கின்றது. அதன்படி சன் டிவியில் ஒளிபரப்பாக கூடிய செவ்வந்தி உள்ளிட்ட ஒரு சில சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் குறைவான புள்ளிகளை பெற்று கடைசி இடத்தில் உள்ளன. டி ஆர் பி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க சன் டிவி அடுத்தடுத்த சீரியல்களை களமிறக்கிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தங்க மீன்கள் என்ற புதிய சீரியலை கொண்டு வர உள்ளது.

இந்த புதிய தொடருக்கு முதலில் செல்லமே என பெயர் வைக்க தற்போது தங்க மீன்கள் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த சீரியல் விரைவில் ஒளிபரப்பாக உள்ள நிலையில் சுந்தரி சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஜிஷ்ணு மேனன் தான் இந்த புதிய சீரியலில் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதனைப் போலவே ஜீ தமிழில் பூவே பூச்சூடவா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா முரளிதரன் இந்த தொடரில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஜீ தமிழில் டான்ஸ் நிகழ்ச்சி மூலம் முதன்முதலில் அறிமுகமான ரேஷ்மா முரளிதரன் பூவே பூச்சூடவா மற்றும் அபி டெய்லர் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானார். இவர் தொகுப்பாளரும் சீரியல் நடிகருமான மதன் பாண்டியன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பிறகு விஜய் டிவியில் கிழக்கு வாசல் என்ற சீரியலில் நடித்தார். அடுத்ததாக நெஞ்சத்தைக் கிள்ளாதே சீரியலிலும் நாயகியாக நடித்த நிலையில் தற்போது இவர் புதிதாக தொடங்க உள்ள தங்க மீன்கள் சீரியலில் நாயகியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
