“மீள்வதற்கான பாதையில் இருக்கிறேன்”.. நஸ்ரியா வெளியிட்ட பதிவால் அதிர்ச்சிக்குள்ளான ரசிகர்கள்..!

By Nanthini on சித்திரை 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் ரசிகர்களின் பெயரை நடிகைகளில் ஒருவர் தான் நஸ்ரியா. ராஜா ராணி, நையாண்டி, திருமணம் எனும் நிக்கா, நேரம், வாயை மூடி பேசவும் போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்த பகத் பாசிலை நஸ்ரியா காதலை திருமணம் செய்து கொண்டார். க்யூட்டான ஜோடி என்று இவர்கள் இருவரையும் ரசிகர்கள் வர்ணிப்பார்கள். மலையாளத்தில் ரசிகர்களுக்கு பிடித்த க்யூட்டான சேட்டை பெண் என்றால் அது நஸ்ரியா தான். அவரை புகழாதவர்கள் யாரும் கிடையாது. சமீபத்தில் பிரித்விராஜ் அளித்த பேட்டியில், என் படங்களை டிசாஸ்டர் பண்றது நஸ்ரியா தான்.

Nazriya Nazim | Latest Nazriya Nazim News, Videos, Photos - tamil360newz

   

ஒன்னும் பண்ண முடியாது. பொழச்சிப்போ விடவேண்டியதா இருக்கு என சிரித்துக் கொண்டே செல்லமாக திட்டினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு நஸ்ரியா பாசில் ஜோசப் உடன் இணைந்து sookshma darshini படத்தில் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. எப்போதுமே சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவா இருக்கும் நஸ்ரியா என்ன ஆனார் என்ற ரசிகர்கள் தேடும் அளவிற்கு காணாமல் போனார். பல மாதங்களாக எந்த ஒரு போஸ்ட்டும் போடவில்லை.

   

Nazriya Nazim Responds To Her Pregnancy Rumours In Her Epic Style! | JFW  Just for women

 

எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நஸ்ரியா தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டுள்ள ஒரு பதிவு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது தொடர்பாக நஸ்ரியா வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் வணக்கம், நீங்கள் அனைவரும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் ஏன் சிறிது காலமாக தொடர்பு கொள்ள முடியாத சூழலில் இருந்து வருகிறேன் என்பது பற்றி உங்களிடம் தெரிவித்துக் கொள்ள விரும்பினேன்.எல்லோருக்கும் தெரியும் நான் சமூக வலைத்தளத்தில் எந்த அளவிற்கு ஆக்டிவாக இருப்பேன். ஆனால் கடந்த சில நாட்களாக நான் emotional welbeing and personal challenges உடன் போராடி வருகின்றேன்.

அப்படி மட்டும் பாக்காத செல்லம்!..கிக் ஏத்தும் லுக்கில் பாடாய் படுத்தும்  நஸ்ரியா...

இதனால் யாருடனும் என்னால் பேச முடியாமல் தூரத்தில் இருக்கும் நிலை ஏற்பட்டது. எனக்கு அழைப்பு விடுத்தவர்கள் மற்றும் என்னுடைய பதிலுக்காக காத்திருந்த அனைவருக்கும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இக்கட்டான சூழலில் என்னுடைய 30 வது பிறந்தநாளை கூட என்னால் கொண்டாட முடியவில்லை. நான் கூடிய விரைவில் மீண்டு வருவேன். அதற்கு அதிக நேரங்கள் ஆகலாம். இதை புரிந்து கொண்டு ஆறுதல் தெரிவிப்பவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று நஸ்ரியா பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வர ரசிகர்கள் பலரும் ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.

 

 

Instagram இல் இந்தப் பதிவைக் காண்க

 

Nazriya Nazim Fahadh பதிவைப் பகிர்ந்துள்ளார் (@nazriyafahadh)