தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர்தான் இயக்குனர் அமீர். 2002 ஆம் ஆண்டு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக திரையுலகில் நுழைந்தார். பிறகு மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அது மட்டுமல்லாமல் இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மௌனம் பேசியதே வெற்றியை தொடர்ந்து 2005 ஆம் ஆண்டு ராம் என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கிய திரைப்படம் தான் பருத்திவீரன். அமீர் மற்றும் நடிகர் கார்த்தி இருவருக்குமே மிகப் பெரிய அடையாளத்தை கொடுத்த திரைப்படம் தான் பருத்திவீரன்.

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற நல்ல வசூலையும் பெற்று இருந்தது. இந்த திரைப்படத்தை ஷவர் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார். இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பருத்திவீரன் திரைப்படத்தில் அமீர் பொய் கணக்கு காட்டியதாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். ஆனால் அந்த சமயத்தில் பருத்திவீரன் படம் எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டபோது அமீர் தன்னுடைய சொந்த பணத்தை வைத்து தான் எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பி இருந்தது.

இப்படியான நிலையில் அமீர் பற்றி ஷாப்பிங் தகவலை வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அதில், ஒரு படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் திடீரென அமீரை காணவில்லையாம். அன்றைய படப்பிடிப்புக்கு அனைவருமே வந்துவிட்ட நிலையில் இயக்குனர் அமீரை மட்டும் காணவில்லை. அன்று மாலை வரை அனைவரும் காத்திருந்து படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு கிளம்பி விட்டனர்.

மறுநாள் காலை அவர் வந்ததும் நேற்று அனைவரும் காத்திருந்தோம் எங்கே சென்று விட்டீர்கள் என்று கேட்க கமல்ஹாசன் படம் மதுரையில் ரிலீஸ் ஆனது அதை பார்க்கச் சென்று விட்டேன் என ஆசார்டாக பதில் கூறியுள்ளார். தன்னை நம்பி 100 பேர் காத்துக் கொண்டிருக்கும் போது எந்தவித பொறுப்புமே இல்லாமல் அவர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் செயல்படக்கூடிய இயக்குனர் தான் அமீர். தமிழ் சினிமாவில் பாலா மற்றும் அமீர் போன்ற இயக்குனர்கள் நல்ல படங்களை கொடுத்தாலும் சில நேரங்களில் பொறுப்பில்லாமல் செயல்பட கூடியவர்கள் தான் என்று வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்து உள்ளார்
