கதை சொல்ல சென்றபோது வெற்றிமாறனை அவமானப்படுத்திய நடிகர்… அதனால்தான் இதுவரை சேர்ந்து பணியாற்றவில்லையா?

By vinoth on சித்திரை 9, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் இன்றிருக்கும் நம்பிக்கைக்குரிய இயக்குனர்களில் முதன்மையானவராக இருக்கிறார் வெற்றிமாறன். பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் மற்றும் விடுதலை என குறைவான படங்களையே அவர் இயக்கி இருந்தாலும் அந்த படங்களின் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது.

முன்னணி நடிகர்களை வைத்து கதையில் அதிக சமரசங்கள் இல்லாமல் அவர் எடுக்கும் படங்கள் கமர்ஷியலாகவும் வெற்றி பெறுகின்றன. இதனால் அவர் இயக்கத்தில் நடிக்க முன்னணி நடிகர்கள் ஆசைப்படுகிறார்கள். சமீபத்தில் அவர் இயக்கிய விடுதலை 2 மட்டும் வணிக ரீதியான வெற்றியைப் பெறவில்லை.

   

இதையடுத்து அவர் நீண்டகாலமாகக் காத்திருக்கும் வாடிவாசல் படத்தைத் தொடங்குவார் என தெரிகிறது. இந்த படத்தில் சூர்யா, அமீர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க ஜி வி பிரகாஷ் இசையமைக்க கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

   

வெற்றிமாறன் இயக்குனர் பாலு மகேந்திரா மற்றும் கதிர் ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியுள்ளார். அவர் தன்னுடைய முதல் படமான பொல்லாதவன் படத்தை தொடங்குவதற்கு முன்னர் சில கதைகளை எழுதி அதை விஜய் உள்ளிட்டப் பல  முன்னணி நடிகர்களிடம் கொண்டு செல்ல முயன்றுள்ளார். ஆனால் அப்போது எதுவும் கைகூடவில்லை.

 

இந்நிலையில் வெற்றிமாறன் தான் எழுதிய ஒரு கல்லூரி சம்மந்தப்பட்ட கதையை அப்போது பிரபலமாக இருந்த ஒரு இளம் நடிகரிடம் சொல்ல சென்றுள்ளார். அவரிடம் கதையை சொன்ன போது வெற்றிமாறன் பதட்டத்தில் சரியாக சொல்லவில்லையாம். ஆனால் அந்த நடிகரோ பந்தாவாக நடந்துகொண்டது மட்டும் இல்லாமல் வெற்றிமாறனை அவமானப்படுத்தியும் அனுப்பிவிட்டாராம். ஆனால் காலமாற்றத்தில் இப்போது வெற்றிமாறன் உச்சகட்ட இயக்குனராகவும் அந்த நடிகர் சினிமா மார்க்கெட்டின் ஓரத்தில் கூட இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளது.