மலையாளத்தில் வெளியான பிரித்விராஜியின் செல்லுலாயுடு படத்தில் இடம் பெற்ற கட்டே கட்டே பாடல் மூலமாக பிரபலமானவர்தான் வைக்கம் விஜயலட்சுமி. மாற்றுத்திறனாளி பாடகியான விஜயலட்சுமியின் வித்தியாசமான குரல் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் கட்டி போட்டது. ராஜமுருகன் இயக்கத்தில் வெளியான குக்கூ திரைப்படத்தின் மூலம் இவர் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தார். அதன்படி தமிழில் இவர் குக்கூ, என்னமோ ஏதோ, காடு, ரோமியோ ஜூலியட், பாகுபலி, தெறி உள்ளிட்ட பல படங்களில் சூப்பர் ஹிட் பாடல்களை பாடியுள்ளார். அதே சமயம் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான வீர சிவாஜி திரைப்படத்தில் இமான் இசையில் வெளியான சொப்பன சுந்தரி பாடல் மூலமாக மிகப்பெரிய வெற்றியையும் வரவேற்பையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெற்றார்.

குறிப்பாக கனா மற்றும் ஜெய் பீம் உள்ளிட்ட படங்களிலும் இவருடைய பாடல்கள் இடம் பெற்றிருந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு பஹ்ரைன் நாட்டில் வேலை பார்த்து வரும் சந்தோஷ் என்பவர் வைக்கம் விஜயலட்சுமியை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். ஆனால் நிச்சயம் நடைபெற்ற முடிந்த சில நாட்களில் மணமகன் ஏராளமான கண்டிஷன் போட்டதால் விஜயலட்சுமி அந்த திருமணத்தை நிறுத்திவிட்டார். அதன் பிறகு அனூப் என்பவர் வைக்கம் விஜயலட்சுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் ஆனதிலிருந்து இருவரது திருமண வாழ்வும் சந்தோசமாக இல்லாத நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு விவாகரத்து செய்து கொண்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இவருடைய விவாகரத்து செய்தி வெளியானதும் பலவிதமான பேச்சுகளும் விமர்சனங்களும் கிளம்பியது. அதற்கெல்லாம் செவி சாய்க்காமல் இருந்த வைக்கம் விஜயலட்சுமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய விவாகரத்திற்கான காரணம் என்ன என்பது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். அதில், திருமணம் ஆகும்வரை எந்த சிக்கலும் கொடுக்காமல் இருந்து வந்த மிமிக்ரி ஆர்டிஸ்ட் மற்றும் இன்டீரியர் டெக்கரேட்டரான அனூப், கொஞ்சம் கொஞ்சமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். நான் விவாகரத்து பெறுவதற்கு காரணம் ஏன் மியூசிக்கில் என்னை அது பண்ண கூடாது இது பண்ண கூடாது என்ற ரொம்ப டிஸ்கரேஜ் பண்ணாரு. நான் மியூசிக்கில் கொஞ்சம் பேமஸ் ஆனது அவருக்கு சுத்தமா பிடிக்கல.

அவருக்குள் கொஞ்சம் ஈகோ இருந்தது என்று நினைக்கிறேன். எங்களுக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்கு அப்புறம் அவர் என்ன ரொம்ப டிஸ்கரேஜ் பண்ண ஆரம்பிச்சுட்டாரு. நான் சாமி ரூமுக்கு போனால் கூட அவருக்கு பிடிக்காது. தேவையே இல்லாம எல்லாத்துக்கும் கோபப்படுவாரு. என் பெற்றோர்களை கூட சந்திக்கக் கூடாது என கண்டிஷன் போட்டாரு. அவர் போட்ட கண்டிஷன்களால் என்னுடைய நிம்மதியே போயிடுச்சு. அதனால்தான் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டேன் என வைக்கம் விஜயலட்சுமி மனம் திறந்து பேசி உள்ளார்.
