விக்ரம் நடிப்பில் உருவான வீரசோழன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியானது. அருண்குமார் இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு சில காரணங்களால் இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவில்லை. அதன் பிறகு இந்த திரைப்படம் கடந்த மார்ச் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பட குழுவினர் தீவிர ப்ரோமோஷனில் ஈடுபட்டிருந்தனர். இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் படம் மார்ச் 27ஆம் தேதி மாலை தான் வெளியானது. வீர தீர சூரன் திரைப்படம் ரிலீஸ் ஆவதில் சில சிக்கல்கள் இருந்ததால் சொன்னபடி இந்த திரைப்படம் அன்று காலை வெளியாகவில்லை.

பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு சிக்கல்களை சமாளித்து இந்த திரைப்படத்தை மாலை முதல் திரையரங்குகளில் வெளியிட்டனர். என்னதான் இந்த திரைப்படம் முதல் நாள் மாலை மற்றும் இரவு காட்சிகள் மட்டும் திரையிடப்பட்டாலும் வசூல் நன்றாகவே அமைந்திருந்தது. முதல் நாளில் வீர தீர சூரன் திரைப்படம் மூன்று கோடி வசூலித்ததாக தகவல் வெளியான நிலையில் காலை முதலே படம் திரையிடப்பட்டு இருந்ததால் வசூல் மேலும் அதிகரித்திருக்கும் எனக் கூறப்படுகிறது. இருந்தாலும் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளதால் போக போக பாக்ஸ் ஆபிஸில் வசூல் பேட்டை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

நாளுக்கு நாள் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் அதிகரித்து வரும் நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வீர தீர சூரன் வசூல் புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக தமிழகத்தில் மூன்று நாட்களில் 10 கோடி ரூபாய் வசூலித்திருந்த இந்த திரைப்படம் நேற்று ஒரே நாளில் மட்டும் சுமார் ஐந்து கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மட்டுமே இந்த திரைப்படம் 16 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

ரஜினியின் லால் சலாம் திரைப்பட லைப் டைம் வசூல் சாதனையை விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் முறியடித்துள்ளது. தமிழ்நாட்டில் மொத்தமாகவே லால்சலாம் 11 கோடி வசூலித்திருந்த நிலையில் அந்த சாதனையை நான்கே நாட்களில் விக்ரம் அசால்டாக அடித்து நொறுக்கி விட்டார். இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் இதுவரை உலக அளவில் மொத்தமாக 19 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
