பிரதீப் ரங்கநாதனின் LIK படத்தில் ஒத்த பாட்டுக்கு இத்தனை கோடியா?.. தயாரிப்பு நிறுவனத்தை ஆட்டம் காண வைத்த விக்னேஷ் சிவன்..!

By Nanthini on பங்குனி 27, 2025

Spread the love

சிம்பு நடிப்பில் வெளியான போடா போடி திரைப்படம் மூலமாக இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்திருந்தார். ஆனால் இந்த படம் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெறவில்லை. அதன் பிறகு சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் விக்னேஷ் சிவன் விஜய் சேதுபதியை வைத்து நானும் ரவுடிதான் என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்தை தனுஷ் தயாரித்திருந்த நிலையில் விஜய் சேதுபதி உடன் நயன்தாரா, பார்த்திபன், ராதிகா மற்றும் ஆர்.ஜே பாலாஜி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன் கூட்டணியின் புதிய படம்….. ஷூட்டிங்  எப்போது?

   

இந்த படத்தின் மூலமாகத்தான் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே காதல் கதை உருவானது.  இப்படியான நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குனராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் பல்வேறு படங்களில் பணியாற்றியுள்ளார். அதன்படி அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படத்தில் இடம்பெறும் வழி துணையே என்ற பாடலை விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார்.

   

பிரதீப் ரங்கநாதன் பிறந்த நாளுக்கு விக்னேஷ் சிவன் கொடுத்த தரமான கிஃப்ட்  இதுதான்! | Times Now Tamil

 

அந்தப் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனிடையே பிரதீப் ரங்க நாதனை வைத்து தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் தான் LIK( ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’). இப்படத்தில் கீர்த்தி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். ’மாஸ்டர்’, ‘லியோ’ உள்ளிட்ட படங்களை தயாரித்த செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

உத்தமன் பிரதீப்புக்கு பர்த்டே.. வாழ்த்து சொன்ன விக்னேஷ் சிவன்.. ஆனால்,  ரசிகர்களின் கோரிக்கையே வேற! | Vignesh Shivan sends warm wishes to Pradeep  Ranganathan and fans asks ...

இப்படியான நிலையில் இப்படத்தை இயக்குவதற்கான பட்ஜெட்டை ஏற்கனவே விக்னேஷ் சிவன் தூக்கி விட்ட நிலையில் அது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்துடன் சில கருத்து வேறுபாடு இருந்து வரும் நிலையில் தற்போது இப்படத்தில் விக்னேஷ் சிவன் ஒரு பாட்டை எடுக்க உள்ளார். அந்தப் பாட்டுக்கு மட்டுமே ஐந்து கோடி செலவாகும் என விக்னேஷ் சிவன் கூறியுள்ள நிலையில் ஒட்டுமொத்த தயாரிப்பு நிறுவனமும் ஆட்டம் கண்டுள்ளது. இது சரிப்பட்டு வருமா வராதா என்று யோசிக்கும் அளவுக்கு விக்னேஷ் சிவன் செய்து வருவதாக கூறப்படுகிறது.