மற்றவர்களை விட எனக்கு சிம்பு ரொம்ப ஸ்பெஷல்.. அதுக்கு காரணமே இதுதான்.. மனம் திறந்த நடிகை சோனா..!

By Nanthini on பங்குனி 19, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.

Actress sona: கோலிவுட் குளறுபடிகள்…வெட்கப்படாத நடிகைகள்.. 'அட்ஜஸ்ட்மென்ட்  வேற லெவலுக்கு போயிருச்சு' - நடிகை சோனா

   

அப்போது அது பெரிய வருத்தமாக தெரியவில்லை என்றாலும் நாட்கள் கடந்தாலும் நல்ல கதாபாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா என்று இயக்குனர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் அவர் பலமுறை தெரிவித்துள்ளார்.  இந்நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் சிம்பு பற்றி பேசியுள்ளார். அதில், நான் முதன் முதலாக சிம்புவை ஒரு பார்ட்டியில் தான் சந்தித்தேன். ஆனால் அதற்கு முன்பே அவருடைய தந்தை டி. ராஜேந்திரன் சாரை எனக்கு நன்றாக தெரியும். டி ராஜேந்திரன் சார் கடைசி படம் இயக்கிக்கொண்டு இருக்கும்போதே அடுத்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தரேன் என்று சொல்லி இருந்தார்.

   

சோனா வீட்டில் நுழைந்த இருவர் கைது | nakkheeran

 

அந்த சமயத்தில் அவருடைய வீட்டுக்கு நான் பலமுறை சென்று இருக்கேன். அப்போ அவங்க குடும்பத்துடன் எனக்கு நல்ல பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு ஒரு பார்ட்டியில் தான் சிம்புவை சந்தித்து பேசி பழகினேன். எனக்கு சிம்புவை ஏன் மிகவும் பிடிக்கும் என்றால் எல்லோருடைய வாழ்க்கையிலும் நல்லது கெட்டது என எல்லாமே கலந்து இருக்கும். நான் ஒரு நல்லவன் என்று காட்டிக் கொள்வதற்காக தவறை எல்லாம் மறைத்துக் கொண்டே இருக்கின்ற ஆள் கிடையாது சிம்பு. எதுவாக இருந்தாலும் பொதுவெளியில் அப்படியே பேசக்கூடியவர். அதனாலயே அவரே எனக்கு மிகவும் பிடிக்கும். அது மட்டுமல்லாமல் நிறைய சினிமா அரசியல் நடக்கக்கூடிய சமயத்தில் நான் புரொடக்ஷன் பண்ணும் போது எனக்காக தைரியமா சிம்பு வந்து நின்னா. நடந்த தப்பா தட்டி கேட்டான்.

தினமும் ஒரு பொம்பள.. அப்பா கேரக்டரால இப்படி ஆயிட்டேன்.. சோனா வாழ்க்கையில்  இவ்ளோ போராட்டமா? | actress sona bold interview about her life journey

கனிமொழி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது ஒரு சின்ன பிரச்சனை வந்துவிட்டது. அப்போ டைரக்டர் என்ன பாத்து உனக்கு என்ன தெரியும் நீ எதுக்கு இப்படி கேள்வி கேட்கிறாய் என்று சொல்லிட்டாரு. அந்த சமயத்துல நான் ஒரு ரவுடி. எனக்கு கோபம் வந்து சண்டைக்கு போயிட்டேன். ஜெமினி ஸ்டுடியோல போடா போடி ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில்தான் இந்த சண்டை நடந்தது. அப்போ நான் சண்டைக்கு போகும்போது சிம்பு தான் வந்து என்ன தடுத்து நிறுத்தி என்ன பிரச்சனை என்று விசாரித்தார். நான் நடந்த பிரச்சனையை சொன்னதும் டைரக்டரை கூப்பிட்டு கண்ணா பின்னான்னு திட்டிட்டான்.

STRWORLD | Simbu Official Website: STR in Actress Sona B'day Party

அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு நான் ஒரு கடை திறக்கும்போது 200க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்களை அழைத்திருந்தேன். அப்போ சினிமா துறையில் இருந்து வெறும் பத்து பேர் தான் வந்திருந்தாங்க. ஒரு கேமரா ஆர்டிஸ்ட் பார்ட்டிக்கு யாரும் போகக்கூடாது என்று யாரோ சொன்னதால் யாருமே வரல. அப்போ சிம்பு தான் என்னோட பிரண்டு பார்ட்டிக்கு நான் போவேன் என்று சொல்லிட்டு எனக்காக வந்து நின்னா. இந்த காரணத்தால தான் சிம்பு எனக்கு ரொம்ப நெருக்கமான நண்பர் என்று சோனா பேசியுள்ளார்.