தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு நடிகைகள் டிரெண்டில் இருப்பார்கள். அப்படி தற்போதைய ட்ரெண்டில் இருப்பவர் தான் நடிகை மமிதா பைஜூ. தருண் மூர்த்தியின் ஆப்ரேஷன் ஜாவா, ரஜிஷா விஜயனின் கோ-கோ போன்ற திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த மலையாள சினிமா வில் நுழைந்தவர் தான் நடிகை மமிதா பைஜூ. அதன் பிறகு இவர் நடித்த சூப்பர் சரண்யா உள்ளிட்ட திரைப்படங்கள் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வெளியான பிரேமலூர் திரைப்படம் இவரை கோலிவுட் மற்றும் டோலிவுட் என அனைத்து பக்கங்களுக்கும் புதிய க்ரஷாக கொண்டு சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த படத்தில் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு மிகவும் பிசியாக பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். கடந்த ஆண்டு வெளியான ரெபல் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் இவர் நடிகையாக அறிமுகமானார் . ஜிவி பிரகாஷ் உடன் அந்த திரைப்படத்தில் நடித்திருந்த இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பு கிடைத்தது. தற்போது விஜயுடன் இணைந்து ஜனநாயகம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இந்த திரைப்படத்திற்கான வாய்ப்பு கிடைத்தது தனக்கு கனவு நினைவாகியது போன்றதொரு தருணம் என அவர் கூறியிருந்தார்.

இந்தப் படத்திற்கு முன்பே விஷ்ணு விஷாலின் இரண்டு வானம் படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகிவிட்டார். இதையெல்லாம் தாண்டி பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் மற்றொரு படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்க உள்ளார். அதே சமயம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்திலும் ஹீரோயினியாக நடிக்க கமிட் ஆகியுள்ளார். அடுத்து வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்த கமிட் ஆகியுள்ளார். இவர் தொடர்ந்து கிட்டத்தட்ட ஐந்து திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.
