தமிழ் திரை உலகில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் நுழைந்தவர் தான் நடிகர் அஜித். சாக்லேட் பாயாக நடிக்க தொடங்கி பல திரைப்படங்களில் அப்படியே நடித்து வந்தார். இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாக உள்ளது. இதனிடையே காட்பாதர் என்ற பெயரிலே அஜித்குமார் கதாநாயகனாக நடிக்க கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ஒரு காலகட்டத்திலே வரலாறு என்ற பெயரில் வெளியானது.

2004 ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி இயக்குனர் கே எஸ் ரவிக்குமாரை சந்தித்த தயாரிப்பாளர் சக்கரவர்த்தி, அஜித் எங்கள் நிறுவனத்திற்கு 100 நாட்கள் கால் சூட் கொடுத்துள்ளார் அவரை வைத்தே நீங்கள் தான் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று கே எஸ் ரவிக்குமாரிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு கே எஸ் ரவிக்குமார் அஜித்தை சந்தித்தபோது அவரும் நீங்க கதையை தயார் பண்ணுங்க நாம சேர்ந்து படம் பண்ணலாம் என்று கூறியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து காட்பாதர் கதை உருவானது. அதன் பிறகு அஜித்தை வைத்து ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் கிட்டத்தட்ட அதன் பிறகு ஆறு மாத காலம் படப்பிடிப்பு நடைபெறவில்லை. இதனிடையே படத்தை தயாரிப்பதாக இருக்க தயாரிப்பாளர் சக்கரவர்த்தி மற்றும் அஜித் இடையே மிகப் பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பு அப்படியே நின்று போனது. அஜித்தை வைத்து பல திரைப்படங்களை தயாரித்தவர் தான் எஸ் எஸ் சக்கரவர்த்தி. இவருக்கும் அஜித்துக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு அந்த காலகட்டத்தில் பல விநியோகஸ்தர்களை பாதித்தது.

ஏனென்றால் பல விநியோகஸ்தர்களுக்கு எஸ்எஸ் சக்கரவர்த்தி பணம் தர வேண்டி இருந்தது. அஜித்தை வைத்து படம் எடுக்கவில்லை என்றால் எப்படி அந்த பணத்தை எவ்வாறு திருப்பித் தருவார் என்று யோசித்து தென்னிந்திய நடிகர் சங்க கூட்டம் நடத்தப்பட்டு இவர்களுடைய பிரச்சனை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒருவழியாக பிரச்சனை சுமூகமாக முடிந்த நிலையில் அதன் பிறகு அஜித் சக்கரவர்த்திக்கு கால் ஷூட் கொடுத்து காலதாமதமாக உருவான திரைப்படம் தான் வரலாறு. காலதாமதமாக வெளியானாலும் கே எஸ் ரவிக்குமார் கதை அமைத்திருந்த விதம் படத்தை வெற்றிப்பாதையை நோக்கி நகர்த்தி சென்றது என்று தான் கூற வேண்டும்.
