96 படத்துல அந்த ஒரு பாட்டுக்கு மட்டுமே 22 நாட்கள் ஆயிருச்சு.. விஜய் சேதுபதி நொந்துட்டாரு.. பிரேம்குமார் ஓபன் டாக்..!

By Nanthini on பங்குனி 17, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 96. இந்த திரைப்படம் அனைத்து தரப்பினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்த நிலையில் இவர்களுடன் இணைந்து கௌரி கிஷன், தேவதர்ஷினி, பகவதி பெருமாள் மற்றும் ரமேஷ் திலக் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இன்னும் சொல்லப்போனால் இந்த திரைப்படம் அனைவருடைய பள்ளி நினைவுக்கும் கொண்டு சென்றது என்று தான் கூற வேண்டும்.

96 - 2' எந்த மாதிரி கதை : இயக்குனர் பிரேம் குமார் வெளியிட்ட தகவல்

   

இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.  கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தை மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் தயாரித்திருந்தது இப்படத்தில் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படியான நிலையில் இயக்குனர் பிரேம்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில், 96 படத்தில் வரும் “இரு காலின் இடையிலே உரசும் பூனையாய் வாழ்க்கை போதும் அடடடா” என்ற பாடல் கிட்டத்தட்ட 22 நாட்கள் ஷூட் செய்யப்பட்டது. டிராவல் எல்லாம் சேர்த்து சுமார் 24 நாட்கள் ஆகிவிட்டது. ஒரு பாட்டு எடுக்க அதிகபட்சமே நான்கு நாட்கள் தான். அந்தமானில் மட்டுமே இந்த பாட்டு நான்கு நாட்கள் ஷூட்டிங் செய்யப்பட்டது.

   

96 movie stills: Vijay Sethupathi, Trisha Krishnan's film set for grand  release - Photos,Images,Gallery - 101051

 

நான்கு நாட்கள் முடிந்ததுமே விஜய் சேதுபதி அவ்வளவுதானா என்று கேட்டார். இல்ல இத முடிச்சுட்டு மணாலி போறோம் என்று சொல்லி கூட்டிட்டு போனோம் ஆனா அங்கயும் முடியாம அப்படியே ஜெய்ப்பூர், நாக்பூர் என பல இடங்களுக்கு போய் அப்படியே ஷூட்டிங் எடுத்துட்டு இருந்தோம். அவரே ஒரு கட்டத்துல பாட்டு முடியுமா முடியாதா என்று யோசிக்கிற அளவுக்கு வந்துட்டாரு. ஊர் ஊரா சுத்தி 24 நாட்கள் சூட் எடுத்து முடிச்சோம் என்று பிரேம்குமார் சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.