சுப்ரமணியபுரம், ரம்மி, அட்டகத்தி, தெகிடி… இந்த படத்துலலாம் நான் தான் நடிச்சிருக்கணும், மிஸ் பண்ணிட்டேன்.. புலம்பும் பிரபல இளம் நடிகை..!

By Nanthini on பங்குனி 12, 2025

Spread the love

சினிமாவில் அறிமுகமானதிலிருந்தே கவர்ச்சியை காட்டாத ஹோம்லி நடிகை சாந்தினி தனது கிளாமரான புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான சித்து பிளஸ் 2 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் சாந்தினி. அதன் பிறகு இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. அதன்படி வில்லம்பு, கட்டப்பாவ காணோம், பாம்பு சட்டை, கவண் மற்றும் மன்னர் வகையறா உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். இவர் 2017 ஆம் ஆண்டு சென்னை பட்டத்தை வென்று மாடலிங் செய்வதோடு தொடர்ந்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார். தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்து வருகின்றார். இவர் நந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

   

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தன. எப்போதும் படங்களிலும் சரி ரியல் லைஃபிலும் சரி ஹோமிலியாக இருக்கும் இவர், கிளாமர் பக்கம் திரும்பி உள்ளார். ஹோம்லி லுக் வொர்கவுட் ஆகவில்லை என கிளாமர் ரூட்டுக்கு மாறிய இவர் இளம் ரசிகர்கள் பலரையும் ஈர்க்கத் தொடங்கினார். திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி காட்டத் தொடங்கிய இவருக்கு ரசிகர்கள் கூட்டம் உயரத் தொடங்கினர். சமீபத்தில் வெளியான ஃபயர் படம் ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருந்தது. தற்போது பெருசு படத்தில் நடிகை சாந்தினி நடித்துள்ளார்.

   

 

இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி ரசிகர்களை ஈர்க்க தொடங்கியுள்ளது . வரிசையாக சிறு பட்ஜெட் படங்களாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை பற்றி கொண்டார். இந்நிலையில் சாந்தினி சமீபத்தில் அளித்த பேட்டியில் தான் சினிமாவில் தவறவிட்ட படங்கள் குறித்து பேசி உள்ளார். அதில், நான் சினிமாவில் மிஸ் பண்ண படங்கள் நிறைய இருக்கு. சுப்பிரமணியபுரம் நாம் பண்ண வேண்டிய படம் தான். அடுத்து ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், அட்டகத்தி, தெகிடி என நிறைய படங்களை நாம் மிஸ் பண்ணிட்டேன்.

பண்ணையாரும் பத்மினியும் படத்த நான் ரிஜெக்ட் பண்ணதுக்கு முக்கிய காரணம் எல்லோரும் அப்ப என்கிட்ட சொன்னாங்க நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இப்பவே சின்ன படத்தில் நடிக்க ஆரம்பிக்காதீங்க பெரிய படம் வரும் என்று சொன்னாங்க. அதனால அந்தப் படத்தை வேண்டாம் என்று சொல்லிட்டேன். அதே மாதிரி சுப்பிரமணியபுரம் படத்துல கூட நிறைய இன்டர்வியூவில் சசிகுமார் சார் சொல்லி இருப்பாரு அந்த படத்துல நான் பண்ண வேண்டும் என்று அவர் ரொம்பவும் ஆசைப்பட்டாரு. ஆனா அதுவும் ஒரு சிறிய பட்ஜெட் படம் என்பதால் எங்க வீட்டுல அந்த படத்துல நடிக்க ஒத்துக்கல என்று சாந்தினி பேசியுள்ளார்