விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘சூப்பர் சிங்கர்’. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமானவர் சிவாங்கி . இவரது குரல் கேட்பதற்கு ஒரு மாதிரியாக இருந்தாலும் ,பாடல் என்று வந்துவிட்டால் இவர் கில்லியாக பாடிய அசத்தி விடுவார். ஆனால் இவரால் இறுதிப் போட்டியை அடைய முடியவில்லை. ஆனால் தற்பொழுதும் ரசிகர்களின் பேவரட் பாடகியாக வலம் வந்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் 3 சீசன்களிலும் கோமாளியாக கலக்கினார்.

இவர் அடுத்து 4வது சீசனில் குக்காக களமிறங்கி அசத்தினார் . சிவாங்கி சின்னத்திரையில் மட்டுமின்றி தற்பொழுது வெள்ளித் திரையிலும் பல படங்களில் நடித்து கலக்கி வருகிறார். நடிகர் சிவகார்த்திகேயனுடன் டான் திரைப்படத்திலும், வடிவேலுடன் நாய் சேகர் ரிட்டன்ஸ் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் சிவாங்கி . இவர் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் சிவாங்கி அளித்த பேட்டியில் முதல்முறையாக தன்னுடைய காதல் தோல்வி குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

அதில், இதற்கு முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தீர்களா என்று கேள்வி கேட்க அதற்கு பதில் அளித்த சிவாங்கி, ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன், எனக்கு 25 வயது ஆகிவிட்டது. ரிலேஷன்ஷிப்பில் இல்லை என்று எப்படி பொய் சொல்ல முடியும். முன்பு ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன் ஆனால் தற்போது எனக்கு பிரேக்கப் ஆகிவிட்டது. அது எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. அந்த Heart Break எனக்கு வலிமையை தான் கொடுத்துள்ளது. அதன் பிறகு என்னை நானே பார்த்துக்கொள்ள தொடங்கி விட்டேன். அழகான பசங்க ஊர் முழுக்க இருக்காங்க, நமக்கு அவங்களை பிடிக்கும், ஆனால் அவர்களுக்கு எல்லாம் நம்மை பிடிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை ரிலேஷன்ஷிப்பில். என்ன பண்றது Heart Break are Important என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
