விஜயகாந்துக்காக சான்ஸ் கேட்டு சென்ற பாக்யராஜ்… ஆனால் அங்கு நடந்த ட்விஸ்ட்.. பல வருடம் கழித்து கேப்டன் செய்த பதிலுதவி!

By vinoth on பங்குனி 7, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

எம் ஜி ஆர் போலவே விஜயகாந்தும் திரையில் நடிக்கும் போது சில கொள்கைகளை கடைபிடித்தார். பெரும்பாலும் மது மற்றும் சிகரெட் குடிக்கும் காட்சிகளில் நடிக்க மறுத்துவிடுவார். அதுபோல பெண்கள் மற்றும் வயதானவர்களை அவமரியாதை செய்வது போலவோ அல்லது அடிப்பது போன்ற காட்சிகளிலோ நடிக்க மாட்டார். அந்தளவுக்கு இமேஜை மெய்ண்டெய்ன் செய்து வந்தார். விஜயகாந்த் கருப்பாக இருந்த காரணத்தால் அவரோடு ஜோடியாக நடிக்க முதலில் நடிகைகள் மறுத்தார்கள்.

   

ஆனாலும் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு 80 களிலும் 90 களிலும் பிஸியான நடிகராக வலம் வந்தார்.  அதன் பின்னர் அவருடன் நடிக்காத முன்னணி நடிகைகளே இல்லை என்று சொல்லலாம். 2000 களுக்குப் பிறகு விஜயகாந்த் மெல்ல மெல்ல தன்னுடைய மார்க்கெட்டை இழக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் அவர் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு  சென்றார். விஜயகாந்த் மொத்தமாக 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் ஒரு படம் கூட தமிழில்லாத பிற மொழிப் படங்கள் இல்லை.

   

 

விஜயகாந்த் உடனான நட்பு குறித்து பேசியுள்ள பாக்யராஜ் “விஜயகாந்த் ஹீரோ ஆவதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். எங்க பாலகுரு சார் இயக்கிய ‘கன்னிப் பருவத்திலே’ படத்தில் அவரை எப்படியாவது ஹீரோ ஆக்கிவிடவேண்டும் என விஜியை அழைத்து சென்றேன்.

ஆனால் அவர்கள் அப்போதே ராஜேஷை ஹீரோவாக கமிட் செய்திருந்தார்கள். அதனால் அவருக்குக் கொடுத்த நம்பிக்கையை கெடுக்க முடியாது என்றார்கள். நான் விஜயகாந்துக்காக அவ்வளவு முயற்சி செய்வதைப் பார்த்து அவர் ‘எனக்கு நன்றி’ சொல்லிவிட்டுப் போனார். அப்போதில் இருந்தே என் மேல் அவருக்கு அன்பு உண்டு. அதனால்தான் நான் கொஞ்சம் பின்னடைவில் இருந்த போது அவரிடம் சொக்கத் தங்கம் கதையை சொன்ன போது உடனே நடிக்க சம்மதித்தார்” எனக் கூறியுள்ளார்.