தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கும். அந்த வரிசையில் இடம் பிடித்தவர் தான் நடிகை சோனா. இவர் பெயருக்கு பின்னால் பல ஹீரோக்களின் பெயர்களும் சேர்ந்து அடிக்கடி செய்திகள் வெளியாகும். காமெடி நடிகர்களில் இருந்து முன்னணி நடிகர்களின் பெயர்களும் அடிப்படும். அஜித் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானவர்தான் சோனா. அதன் பிறகு இவருக்கு கிடைத்த கதாபாத்திரங்கள் அனைத்தும் கவர்ச்சியான நடிகை கதாபாத்திரம் தான். தொடர்ந்து கவர்ச்சி நடிகையாக படங்களில் அவரை வெளிப்படுத்தி கிட்டத்தட்ட ஒரு கிளாமர் நடிகையாகவே மாறிவிட்டார்.

அப்போது அது பெரிய வருத்தமாக தெரியவில்லை என்றாலும் நாட்கள் கடந்தாலும் நல்ல கதாபாத்திரம் கேட்டாலும் இல்லை மேடம் இது உங்களுக்கு இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு நடிக்கிறீர்களா என்று இயக்குனர்களே முடிவு செய்வதாக வேதனையுடன் அவர் பலமுறை தெரிவித்துள்ளார். இப்படியான நிலையில் நடிகை சோனா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது குடும்பம் குறித்து உருக்கமாக பேசி உள்ளார். அதில், நான் பாண்டிச்சேரியை பூர்வீகமாக கொண்டவர். என்னுடைய தந்தை பிரிட்டிஷ் ஜெர்மனியை சேர்ந்தவர். அம்மா ஸ்ரீலங்காவை சேர்ந்த பெண். என்னை பலரும் எந்த ஊர் என்று கேட்டால் எதை தேர்வு செய்வது என்று தெரியாமல் நான் பாண்டிச்சேரி பொண்ணு என்று கூறி விடுவேன்.

பல கசப்பான நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்து விட்டது. 14 வயதிலேயே நான் சினிமாவிற்கு வந்து விட்டேன். அதனால் எது சரி தவறு என்று எனக்கு அப்போது தெரியவில்லை. ஒரு நாள் வயதான கிழவன் என்னிடம் டபுள் மீனிங்கில் பேசி சிரித்தார். என் அப்பா மாதிரி ஒரு மோசமான மனிதரை நான் பார்த்ததே கிடையாது. தினமும் ஒரு பெண்ணுடன் தான் உறவு வைத்திருப்பார். என் பாட்டி வீட்டில் தான் ஒரு பக்கம் அவரும் மற்றொரு பக்கம் வேறு ஒரு பெண்ணும் நிற்பார்கள். அந்த சமயத்தில் பஞ்சாயத்து நடக்கும். தினமும் ஒரு பெண்ணுடன் தகாத உறவில் ஈடுபட்டதால் என் அம்மா மிகவும் சிரமப்பட்டார். பிறகு என் அப்பா எங்களை விட்டு சென்றதும் நான் அம்மாவுக்காகவே வாழ வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானேன்.

என் அப்பா என்னை பார்த்து மிகவும் மோசமானவள் நீ. ரொம்பவும் கெட்ட பொண்ணு, கேரக்டர் சரி இல்லை என்று கூறுவார். இதன் காரணமாக ஒரு ஆணை போல 14 வயதில் என்னுடைய ரூட்டும் மாறியது. என்னைப் பெற்ற அப்பாவே என்னை தப்பான பொண்ணு என்று கூறும் போது மற்றவர்கள் என்னை கூறினால் எனக்கு என்ன ஆகப்போகிறது என்றுதான் நான் நினைத்துக் கொண்டேன். அதனால் குடி மற்றும் பார்ட்டி என தப்பான முடிவுகளுக்குள் சிக்கிக் கொண்டேன்.

நான் என்னோட அப்பா பாசத்துக்கு ரொம்பவும் ஏங்கினேன். எங்க அம்மா சிரிச்சு கூட நான் பார்த்ததே இல்லை. ரொம்ப சின்ன வயசுல இது மாதிரி எல்லாம் நடந்ததால் எனக்கு அப்ப என்ன நடந்துச்சுன்னு கூட புரியல. இப்போதான் அன்னைக்கு எங்க அப்பா பண்ணது எல்லாமே தப்புன்னு புரியுது. அதனாலதான் நானும் குடி மற்றும் பார்ட்டி என உள்ள வந்து என்ன மென்டலி தயார்படுத்திக்க நினைத்தேன். ஒரு கட்டத்துல அதெல்லாம் ரொம்ப தப்பு என்று நினைத்து என்னோட நண்பர்கள் கிட்ட நான் பீல் பண்ணி சொல்லி இருக்கேன். ஒருவேளை நான் அப்படி பண்ணாம இருந்திருந்தா என் வாழ்க்கை மாறியிருக்கலாம் இருந்தாலும் வாழ்க்கை மாறி இருக்குமா என்பது சந்தேகம்தான் என்று கண்ணீருடன் சோனா பேட்டி அளித்துள்ளார்.
