விஜய் மேல இன்னும் கோபம் இல்ல… ஆனா அத அவர் சரியா ஹேண்டில் பண்ணிருக்கலாம்..? நெப்போலியன் வருத்தம்!

By vinoth on பங்குனி 6, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். திமுக பிரமுகர் கே என் நேருவின் நெருங்கிய உறவினரான இவர் பாரதிராஜாவின் அறிமுகத்தால் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து வில்லனாக நடித்து வந்த அவருக்கு ரஜினிக்கு வில்லனாக நடித்த ‘எஜமான்’ திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பின்னர் ’சீவலப்பேரி பாண்டி’ எனும் படத்தின் கதாநாயகன் ஆனார். அந்த படம் வெற்றிப் பெற்றதை அடுத்து சீவலப்பேரி பாண்டி போன்ற சில படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனாலும் அவரால் கதாநாயகனாக ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் நிலைக்க முடியவில்லை. பின்னர் மீண்டும் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க தொடங்கினர்.

   

அதில் கமல்ஹாசனோடு அவர் நடித்த விருமாண்டி மற்றும் தசாவதாரம் ஆகிய படங்கள் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தன. தன்னுடைய மகனின் உடல்நிலை காரணமாக அவர் இப்போது அமெரிக்காவிலேயே நிரந்தரமாக செட்டில் ஆகிவிட்டார். இப்போது ஆண்டுக்கு ஒருமாதம் மட்டும் தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார்.

   

 

இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் அவர் அளித்த ஒரு நேர்காணலில் தனக்கும் நடிகர் விஜய்க்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி பேசியுள்ளார். அதில் “போக்கிரி படத்தின் ஷூட்டிங்கப்ப எனக்கும் விஜய்க்கும் ஒரு வாக்குவாதம் நடந்தது. அதில் இருந்து நான் அவரோடு பேசுவது கிடையாது. அவர் படங்களையும் பார்ப்பதில்லை” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அதன் பின்னர் சமீபத்தில் அதுபற்றி பேசும்போது “எனக்கு இன்னமும் விஜய் மேல் கோபம் எல்லாம் இல்லை. அந்த சம்பவத்தை அவர் நிதானமாக ஹெண்டில் செய்திருக்கலாம். இப்போதும் அவர் அழைத்து அவர் படத்தில் நடிக்க சொன்னால் நான் தயாராக இருக்கிறேன்” எனப் பேசியுள்ளார்.