சொந்த அப்பாவாவே இருந்தாலும் ஸ்ட்ரிக்ட்தான்… கஸ்தூரி ராஜா நடிப்பில் திருப்தி இல்லாமல் தூக்கிய செல்வராகவன்!

By vinoth on பங்குனி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தனக்கென தனது தனித்துவமான படங்களின் மூலம் ஒரு இடத்தை பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளிவந்த முதல் திரைப்படம் ‘துள்ளுவதோ இளமை’. ஆனால் அந்த படம் அவரின் தந்தையின் பெயரில் ரிலீஸ் ஆனது.

அதன் பின்னர் அவர் இயக்கிய காதல் கொண்டேன், 7 ஜி ரெயின்போ காலணி , புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன மற்றும் என் ஜி கே ஆகிய திரைப்படங்கள் அவருக்கு தனித்த அடையாளத்தை உருவாக்கின. ஒரு கட்டத்தில் அவர் இயக்கிய படங்கள் வரிசையாக தோல்வி அடைய அவர் நடிகராகவும் அறிமுகமானார்.

   

அந்த வகையில் சாணிக்காயிதம், பீஸ்ட் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இறுதியாக இவர் நடிப்பில் இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ‘பகாசுரன்’ திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இவர் இறுதியாக தனுஷ் நடிப்பில் வெளியே வந்த ‘நானே வருவேன்’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதன் பின்னர் தனுஷ் இயக்கியுள்ள ராயன் திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

   

 

தற்போது 7ஜி ரெயின்போ காலனி 2 மற்றும் ‘மெண்டல் மனதில்’ ஆகிய படங்களை இயக்கி வருகிறார். இந்நிலையில் செல்வராகவன் பற்றி ஒரு சுவாரஸ்யமானத் தகவலைப் பார்க்கலாம். செல்வராகவன் இயக்கத்தில் உருவான கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக ‘புதுப்பேட்டை’ இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

இந்த படத்தில் தனுஷ் கதாபாத்திரத்தின் அப்பா கதாபாத்திரத்தில் முதலில் தனது தந்தை கஸ்தூரி ராஜாவைதான் நடிக்க வைத்தாராம் செல்வராகவன். ஆனால் அவர் நடிப்பில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட்டு பின்னர் மூனார் ரமேஷை நடிக்கவைத்தாராம்.