கற்றது தமிழ் படத்துக்குப் பிறகு விருதுகள் மேல் இருக்கும் நம்பிக்கையே போயிடுச்சு… நடிகர் ஜீவா சொன்ன காரணம்!

By vinoth on பங்குனி 4, 2025

Spread the love

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஆர் பி சௌத்ரியின் இளைய மகன் ஜீவா. இவர் அவர் தந்தை தயாரித்த ‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலமாக நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் வரிசையாக பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

ஆசை ஆசையாய் மற்றும் தித்திக்குதே திரைப்படங்களில் லவ்வர் பாயாக வந்த ஜீவா அமீர் இயக்கத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு வெளியான ராம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த நடிகர் என்று ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்தார். இதனைத் தொடர்ந்து  டிஷ்யூம், பொறி, கோ, நண்பன் என ஒரு பக்கம் கமர்சியல் படங்களில் நடித்தாலும் இடையில் ஈ மற்றும் கற்றது தமிழ் என நடிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களிலும் ஜீவா நடித்து வந்தார்.

   

தமிழ் சினிமாவின் நம்பிக்கைக்குரிய நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வந்த ஜீவா திடீரென சில தவறான படங்களை தேர்வு செய்து நடித்ததால் மார்க்கெட்டை இழந்தார். இப்போது அவர் கைவசம் பெரிதாகப் படங்கள் இல்லை. சமீபத்தில் ப்ளாக் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கவனம் ஈர்த்துள்ளார். இதையடுத்து கார்த்தி அடுத்து நடிக்கும் படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

   

 

இந்நிலையில் ஜீவா சமீபத்தில் அளித்துள்ள நேர்காணலில் “நான் நடித்த கற்றது தமிழ் படத்தைப் பார்த்த பலரும் இந்த படத்துக்காக தேசிய விருது கிடைக்கும் என்று சொல்லி சொல்லி உசுப்பேற்றினர். நானும் ரொம்ப ஆசையாகக் காத்திருந்தேன். ஆனால் பட ரிலீஸுக்குப் பிறகு தயாரிப்பாளர் இறந்துவிட்டார். அதனால் தேசிய விருது உள்ளிட்ட எந்த விருதுகளுக்கும் விண்ணப்பிக்கவே இல்லை.

அதனால் அதன் பிறகு எனக்கு விருதுகள் மேல் நம்பிக்கையே போயிடுச்சு. அதன் பிறகு நான் எந்த விருது விழாக்களுக்கும் செல்வதும் இல்லை” எனக் கூறியுள்ளார்.