இளையராஜாவை நான் காக்க வைக்கக் காரணமே இதுதான்… ஆனா அவரு பயந்துட்டாரு – பஞ்சு அருணாசலம் பகிர்ந்த தகவல்!

By vinoth on பங்குனி 3, 2025

Spread the love

இன்றைக்கு உலகில் இருக்கும் இசையமைப்பாளர்களில் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவராக இருக்கிறார் இளையராஜா. இப்போதும் தன்னுடைய 82 ஆவது  வயதில் பிஸியாக பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதுவரை அவர் 1200 படங்களுக்கு இசையமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது தவிர இசைக் கச்சேரிகளை உலகம் முழுவதும் நடத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல ஜாம்பவான் இசையமைப்பாளர்கள் உருவாகியுள்ளார்கள். ஆனால் அவர்களுக்கும் இளையராஜாவுக்கும் இடையே உள்ள பெரிய வித்தியாசமே பின்னணி இசையில் இளையராஜாவுக்கு நிகர் அவர் மட்டுமே. அவரின் வருகைக்குப் பிறகே தமிழ் சினிமாவில் பின்னணி இசையை இயக்குனர்கள் உணர ஆரம்பித்தார்கள் என்றால் அது மிகையாகாது.

   

இதையடுத்து இப்போது இளையராஜா தற்போது தன்னுடைய ‘valiant’ என்ற முதல் சிம்ஃபொனியை நிகழ்த்த உள்ளார். அதற்கான ஒத்திகை வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. இந்நிலையில் இளையராஜாவை முதல் முதலாக ‘அன்னக்கிளி’ படத்தில் அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் இளையராஜாவைக் காக்கவைத்தது ஏன் என்று கூறியுள்ளார்.

   

 

அதில் “நான் இளையராஜா பாடிக்காட்டிய பாடல்களை எல்லாம் கேட்டு ஆச்சர்யமடைந்து, இந்த பாடல்களுக்கு ஏற்ப கதை எழுதுகிறேன் என்று கூறினேன். அதன் பின்னர் நான் எடுத்த ரெண்டு படங்களுக்கு இளையராஜாவை பயன்படுத்தவில்லை. ஏனென்றால் அதெல்லாம் இசைக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் இல்லை. காமெடி படங்கள். ஆனால் நான் வேறு இசையமைப்பாளர்களை வைத்து எடுப்பதைப் பார்த்து இளையராஜா பயந்துவிட்டார்.

அதன் பின்னர்தான் அன்னக்கிளி படத்தை உருவாக்கினோம். அந்த படத்தின் கதை சிறப்பாக அமைந்ததால் இளையராஜாவை இசையமைக்க வைத்தேன். அப்போது பலர் என்னைத் தடுத்தார்கள். ஆனால் நான் விடாப்பிடியாக இருந்து இளையராஜாதான் வேண்டும் என இசையமைக்க வைத்தேன்” எனப் பேசியுள்ளார்.