இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மாளவிகா மோகனன். ரஜினி நடிப்பில் வெளியான பேட்டை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் விஜயின் மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பிறகு இவருடைய நடிப்பு அனைவரையும் அசர வைத்த நிலையில் தொடர்ந்து இவருக்கு பட வாய்ப்புகள் கிடைத்தன. இறுதியாக பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படத்தில் ஹீரோயினியாக நடித்திருந்தார்.

இவர் அந்த படத்தில் ஆரத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாள நடிகையான இவர் தற்போது இந்தி மற்றும் தமிழ் என பல்வேறு மொழிகளில் டாப் ஹீரோயினியாக மாறியுள்ளார்.

ஹிந்தியில் யுத்ரா திரைப்படத்தை தொடர்ந்து பிரபாஸின் ராஜா சாப் மற்றும் கார்த்தியுடன் சர்தார் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகின்றார்.

இப்படியான நிலையில் மலையாள திரை உலகில் மூத்த முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மோகன்லாலுக்கு ஜோடியாக தற்போது மாளவிகா மோகனன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் மாளவிகா மோகனன் மோகன்லாலுக்கு ஜோடியாக கதாநாயகியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன் அடிக்கடி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம்.

அதன்படி தற்போது ஓவர் கிளாமர் காட்டி அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

