அவரால தான் என் வாழ்க்கையே மாறிடுச்சு… சத்குரு பற்றி உருக்கமாக பேசிய நடிகர் சந்தானம்…!

By Nanthini on மாசி 28, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் தற்போது முன்னாடி காமெடி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சந்தானம் விஜய் டிவியில் லொள்ளு சபா காமெடி நிகழ்ச்சி மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவருடைய திறமையை பார்த்த நடிகர் சிம்பு தான் இலக்கிய மன்மதன் திரைப்படத்தில் சந்தானத்தை அறிமுகம் செய்து வைத்து சினிமாவுக்குள் கொண்டு வந்தார். அதன் பிறகு சந்தானம் பல திரைப்படங்களில் நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார். ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக அவர் மாறினார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஷால், கார்த்தி, சூர்யா, ஜெயம் ரவி மற்றும் ஆர்யா உள்ளிட்ட இளம் ஹீரோக்களின் படங்களில் சந்தானம் கண்டிப்பாக இருப்பார்.

Santhanam as the protagonist | கதாநாயகனாக சந்தானம்

   

குறிப்பாக சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற திரைப்படங்களில் இவருடைய காமெடி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பல படங்களில் காமெடி நடிகராக நடித்த ரசிகர்களை சிரிக்க வைத்த சந்தானம் ஒரு கட்டத்தில் இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அப்படி அவர் நடிப்பில் வெளியான படங்களில் தில்லுக்கு துட்டு, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் போன்ற படங்கள் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற படங்கள் தோல்வியை தான் தழுவியது.

   

Esha Yoga Sadhguru Challenge To Actor Santhanam Video Here

 

இப்படியான நிலையில் 12 வருடங்களுக்கு முன்பு விஷாலுடன் அவர் நடித்த மதகஜராஜா திரைப்படம் சமீபத்தில் பொங்கலுக்கு ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் வரும் சந்தானத்தின் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் சமீபத்தில் மகா சிவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டது குறித்து பேசிய சந்தானம், ஈஷா யோகாவில் பயிற்சி எடுத்துக் கொண்டதால் என் வாழ்க்கை எதுவுமே மாறல. ஆனால் அந்த வாழ்க்கையை நாம் பார்க்கிற விதம் கொஞ்சம் எங்கிட்ட மாறி இருக்கு. அதாவது முதலில் வாழ்க்கையில் வர பிரச்சனைகளை எல்லாம் வேற மாதிரி பார்ப்பேன். ஆனா இப்போ வேற மாதிரி பார்க்கிறேன். அந்தப் பக்குவத்தை எனக்கு கொடுத்தவர் சத்குருதான் என்று சந்தானம் பேசியுள்ளார்.