வடிவேலுவின் முடியை பிடித்து ஒரு வலி பண்ணிய பிரபுதேவா.. வெளியான வைரல் வீடியோ..!

By Nanthini on மாசி 25, 2025

Spread the love

பிரபல நடிகரும் நடன கலைஞருமான பிரபு தேவாவின் முதல் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் ரசிகர்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்கள் என பலரும் பங்கேற்று இருந்தனர். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் கொண்டாடப்படும் பிரபு தேவா நடன இயக்கம், நடிப்பு மற்றும் இயக்கம் என்று பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். இவர் இதுவரை தன்னுடைய நடன நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்க்க நேரடியாக எங்கும் நடத்தியது கிடையாது. இப்படி ஒரு நடன நிகழ்ச்சியை நடத்துவது இதுதான் முதல் முறை.

Prabhu Deva Concert: 'நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன், ஆனா...' - பிரபு தேவா குறித்து வடிவேலு |vadivelu speech at prabhu deva dance concert

   

அருண் ஈவென்ட்ஸ் நிறுவனம் ஒருங்கிணைத்த பிரபுதேவாவின் இந்த லைவ் நடன நிகழ்ச்சி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய் எம் சி ஏ மைதானத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து 100 நடன கலைஞர்களின் மத்தியில் “ஊர்வசி ஊர்வசி” பாடலுடன் பிரபுதேவா அரங்கம் அதிர நடன நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் சாண்டி, நடிகர்கள் பரத், சாந்தனு, நாகேந்திர பிரசாத், நடிகைகள் ராய் லட்சுமி மற்றும் ரித்திகா சிங் உள்ளிட்டோர் பிரபுதேவா உடன் இணைந்து நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்தனர்.

   

Dhanush danced at Prabhu Deva's show | பிரபுதேவா நிகழ்ச்சியில் நடனமாடிய தனுஷ்

 

இந்த நிகழ்ச்சியில் நடிகர் பாக்கியராஜ், வடிவேலு மற்றும் தனுஷ் உள்ளிட்ட நடிகர்களும் ரம்பா மற்றும் மீனா உள்ளிட்ட நடிகைகளும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பிரபுதேவாவின் காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற ” பேட்ட ராப்” பாடலுக்கு நடனமாடி கொண்டிருந்த பிரபுதேவா மேடைக்கு கீழ் அமர்ந்து கொண்டு இருந்த நடிகர் வடிவேலு அருகில் வந்து பல சேட்டைகளை செய்தார். வடிவேலும் பதிலுக்கு முக பாவனைகளை மாற்றி பாடலுடன் சேர்ந்து சேட்டை செய்தார்.

Prabhu Deva Concert: 'நிகழ்ச்சிக்கு வர சொன்னாருன்னு வந்தேன், ஆனா...' - பிரபு தேவா குறித்து வடிவேலு |vadivelu speech at prabhu deva dance concert

தொடர்ந்து பாடலுக்கு நடனமாடியபடியே வடிவேலுவின் தலைமுடியை கலைத்துப் போட்டார் பிரபுதேவா. இருவருடைய செயல்களையும் பார்த்த ரசிகர்கள் கத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தற்போது அது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 1994 ஆம் ஆண்டு வெளியான காதலன் திரைப்படத்தின் பேட்ட ராப் பாடலில் பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவருடைய காம்போவும் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.