என் வாழ்க்கையே மாறிடுச்சு… யாராலயுமே அப்படி ஒரு விஷயத்தை பண்ண முடியாது.. ரவீந்தர் மனைவி மகாலட்சுமி எமோஷனல்..!

By Nanthini on மாசி 25, 2025

Spread the love

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இணையத்தை ஆக்கிரமித்த செய்திகளில் ஒன்றுதான் சீரியல் நடிகை மகாலட்சுமியின் திருமணம். நடிகை மகாலட்சுமி ஆரம்பத்தில் தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமாகி அதன் பிறகு சீரியல்களில் கதாநாயகியாகவும் வெள்ளி கதாபாத்திரத்திலும் நடித்து வந்தார். இதனிடையே கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு திடீரென்று தயாரிப்பாளரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் விமர்சகர்மான ரவீந்தரை திருமணம் செய்து கொண்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். இருவரும் திருமணம் செய்து இருந்ததை அறிவித்ததும் ரசிகர்கள் பெரும்பாலானோர் நம்பவில்லை.

Mahalakshmi Ravindar shares her sons photo on Instagram | மகாலட்சுமிக்கு  இவ்வளவு பெரிய மகனா..! - வைரலாகும் போட்டோ

   

உடலளவில் ரவீந்தர் மகாலட்சுமிக்கு பொருத்தமாக இல்லை என்ற பலரும் விமர்சித்தனர். ஆனால் இரண்டு வருடங்களாக காதலித்து ரவீந்தரை திருமணம் செய்துள்ளதாக மகாலட்சுமி அறிவித்தது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து பல விமர்சனங்கள் வந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தற்போது மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் தம்பதியினர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர். சமீபத்தில் கூட ரவீந்தர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார்.

   

அப்படி ஒரு ஆள்.. ரவீந்தர் நடிகை மஹாலக்ஷ்மி பற்றி போட்ட பதிவு

 

இப்படியான நிலையில் சமீபத்தில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் பிரபல யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், என்னுடைய வாழ்க்கையை அவ்வளவுதான் முடிஞ்சிடுச்சு இனிமே நானும் என்னுடைய பையனும் மட்டும்தான் என்று தனியாக ஒரு வட்டம் போட்டுக் கொண்டு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தேன். அப்போதான் ரவீந்தர் என்னுடைய வாழ்க்கைக்குள் வந்தார். எல்லா விஷயங்களையும் எடுத்துக் கூறிய போது அனைத்தையும் புரிந்து கொண்ட என் மீது அன்பு செலுத்த ஆரம்பித்தார். என்னுடைய வாழ்க்கையை மாற்றிய இவருக்கு இப்போ மட்டுமல்ல என் வாழ்நாள் முழுவதும் நன்றி சொல்ல நான் கடமைப்பட்டுள்ளேன்.

திருமணமாகி 6 மாதம்; நல்ல செய்தியா - கொண்டாடிய மகாலட்சுமி ரவீந்தர்! -  தமிழ்நாடு

இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றிருந்த சமயத்தில் நான் ரொம்ப அழுதுட்டேன். ஏனென்றால் அவரால் ஒரு வேலையை அவரால் செய்து கொள்ள முடியாத சூழலில் இருக்கும் போது அங்கு சென்று தனியாக எப்படி அவரால் இருக்க முடியும் என்று நான் யோசித்தேன். இதையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போது என்னை அறியாமல் எனக்கே அழகை வந்துவிட்டது மகாலட்சுமி எமோஷனலாக பேசினார். இதனை தொடர்ந்து பேசிய ரவீந்தர், மகாவை விட வேறு யாராலும் அதிகமாக லவ் பண்ண முடியாது.

மகாலட்சுமிக்கு "புது பெயர்" வைத்த ரவீந்தர் - இணையதளத்தை கலக்கும்  புகைப்படம்..! | tamil360newz

நான் இவளை லவ் பண்ணிட்டு இருக்கேன் என்றால் அவர் லவ் பண்றத தான் வாழ்க்கையாவே வைத்திருக்கிறாள். எந்த இடத்திலும் அவள் என்னை விட்டுக் கொடுத்ததே கிடையாது. விட்டுக் கொடுக்காமல் லவ் பண்ற அவளோட அந்த கேரக்டர் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைய முறை நானே மஹாவை பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கேன். எது நடந்தாலும் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டாள். எனக்கு ஏதாவது என்றால் மட்டும் சோர்ந்து போய்விடுவாள். அது ஒன்னு மட்டும் தான் அவளை பாதிக்கும் என்று ரவீந்தர் பேசியுள்ளார்.