தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கடுதா 2017 ஆம் ஆண்டு பா.பாண்டி திரைப்படம் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். கடந்த ஆண்டு ராயன் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் அவரையே ஹீரோவாகவும் நடித்திருந்தார். இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்.

இந்த திரைப்படத்தில் தன் அக்கா மகனை நாயகனாக நடிக்க வைத்துள்ள தனுஷ் அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா வாரியர் ஆகியோரையும் நடிக்க வைத்துள்ளார். இவர்களுடன் இணைந்து சரத்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டு இருந்தது. இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் பல்பு வாங்கியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் முதல் நாளில் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் தன்னுடைய விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காதல் தோல்வியால் வருத்தத்தில் இருக்கக்கூடிய கதாநாயகனை அவருடைய பெற்றோர் ஆறுதல் கூறி திருமணம் செய்து வைக்க முயற்சிக்கின்றனர். பெண் பார்க்க சென்ற இடத்தில் பள்ளிக்காலத் தோழியை ஹீரோ பார்க்கின்றார். அதன் பிறகு இருவரும் நன்கு பழகி ஒருவருக்கு ஒருவரை பிடித்து போகின்றது. அப்போது கதாநாயகனின் முன்னாள் காதலியின் திருமண அழைப்பு வருகின்றது. திருமணத்திற்கு நண்பர்களுடன் கதாநாயகன் செல்கின்றார். அதன் பிறகு என்ன ஆனது என்பதுதான் படத்தின் கதை. படத்தின் கதை பற்றி இயக்குனர் வழக்கமான காதல் கதை என்று கூறி முன் ஜாமீன் வாங்கிக் கொள்கின்றார். எனவே கதை குறித்து கூற எதுவும் கிடையாது.

திரைக்கதையாக இந்த படம் எப்படி இருந்தது என்றால் படம் மிகவும் ஸ்லோவாக தான் இருந்தது. ஆனால் படம் போர் அடிக்கவில்லை. ஒரு மிதமான வேகத்தில் படம் போய்க் கொண்டு இருந்தது. முதல் பாதியை விட இரண்டாம் பாதியை கொஞ்சம் வேகமாக தான் இருந்தது. படம் முடியும் சமயத்தில்தான் சிலர் ட்விஸ்ட்டுகளை வைக்கிறேன் என்று இழுத்தடித்துள்ளனர். படத்தில் ஹீரோ புதிது என்பதால் அவர் ஒருவரை மொத்த கதையையும் தாங்க முடியாது என்பதால் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். அனைவருக்கும் ஸ்கோர் செய்ய நல்ல வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாநாயகன் தனுஷ் குடும்பத்தில் இருந்து வந்துள்ளார். அதனால் அவர் தனுஷ் போல் நடிப்பார் என்று கூற முடியாது.

படத்தில் ஓரளவுக்கு நன்றாகத் தான் நடித்துள்ளார். படத்தின் கதை வழக்கமான காதல் கதை என்றாலும் ஆங்காங்கே காமெடிகளை போட்டு படத்தை நகர்த்திக் கொண்டு விட்டனர். இரண்டாம் பாதியில் கொஞ்சம் குழப்பம் உள்ளது. எமோஷனல் ஆன சீன்கள் எல்லாம் காமெடியாகவும் காமெடியான சீன்கள் எல்லாம் எமோஷனல் ஆகவும் எடுத்துள்ளனர். படம் மேக்கிங் ஆக நன்றாக இருந்துள்ளது. ஒளிப்பதிவு மற்றும் இசை என அனைத்துமே அருமை. மாடர்ன் என அவர்கள் நினைத்துக் கொண்டது என்னவென்றால் படத்தில் வரும் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் சரக்கு அடிக்கின்றனர். ஒரு சில காட்சிகள் சினிமா தனமாகத் தான் இருக்கின்றது. இளைஞர்களை இந்த படம் கட்டாயம் கவரும். சில காட்சிகளை மட்டும் சிறப்பாக செய்திருந்தால் அனைவரும் ரசிக்கக்கூடிய படமாக கட்டாயம் மாறி இருக்கும். இருந்தாலும் படம் ஓரளவுக்கு நன்றாகத்தான் உள்ளது என ப்ளூ சட்டை மாறன் பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்துள்ளார்.
