வசூலில் மொக்கை வாங்கிய தனுஷின் NEEK… கெத்து காட்டிய டிராகன்… வெளியானது முதல் நாள் கலெக்ஷன் விவரம்..!!

By Nanthini on மாசி 22, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமல்லாமல் கடுதா 2017 ஆம் ஆண்டு பா.பாண்டி திரைப்படம் மூலமாக இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். அந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றியடையா விட்டாலும் உடலுக்கு மோசம் இல்லாமல் தப்பித்தது என்று தான் சொல்ல வேண்டும். அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்த தனுஷ் சுமார் 7 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு ராயல் திரைப்படத்தை இயக்கியிருந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் அவரையே ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட முன்பதிவில் சிம்பு ரசிகர்கள் செய்த  குசும்பு!

   

இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 150 கோடிக்கு மேல் வசூல் செய்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் இயக்கத்தில் வெளியாகி உள்ள திரைப்படம் தான் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த திரைப்படத்தில் தன் அக்கா மகனை நாயகனாக நடிக்க வைத்துள்ள தனுஷ் அனிகா சுரேந்திரன் மற்றும் பிரியா வாரியர் ஆகியோரையும் நடிக்க வைத்துள்ளார். இவர்களுடன் இணைந்து சரத்குமார் மற்றும் சரண்யா பொன்வண்ணன் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்துள்ளது.

   

நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்| திரைவிமர்சனம் | Nilavuku En Mel Ennadi  Kobam | Movie Review

 

மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியான இந்த திரைப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டு இருந்தது. இந்தத் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெறும் என எதிர்பார்த்த நிலையில் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸில் பல்பு வாங்கியுள்ளது. அதன்படி இந்த திரைப்படம் முதல் நாளில் இரண்டு கோடி ரூபாய் மட்டுமே வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிராகன் Review: பிரதீப் ரங்கநாதனின் 'பக்கா' என்டர்டெயினர்! | Dragon Movie  Review - hindutamil.in

இந்தப் படத்திற்கு போட்டியாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றி பெற்று வரும் நிலையில் இப்படம் சுமார் 7.5 கோடி வசூலித்துள்ளது. அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். காதல் கதையை மையமாகக் கொண்டு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது வசூல் ரீதியாகவே தெரிகிறது.