ஒரு காலத்தில் மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக தன்னுடைய திரை வாழ்க்கையை தொடங்கி தொகுப்பாளராக உயர்ந்து பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக நுழைந்தவர் தான் சிவகார்த்திகேயன். தனக்கு கிடைத்த சிறிய சிறிய வாய்ப்புகளையும் கச்சதமாக பயன்படுத்திக்கொண்டு இன்று தமிழ் சினிமாவே கொண்டாடும் அளவுக்கு சிவகார்த்திகேயன் முன்னணி நடிகர் என்ற புகழைப் பெற்றுள்ளார். சின்னத்திரையில் தொடங்கிய இவருடைய பயணம் வெள்ளித்திரையில் கொடி கட்டி பறக்க முக்கிய காரணம் வெற்றியோ தோல்வியோ நானே முடிவு பண்ணும் வரை என்னை யாராலும் தடுக்க முடியாது என்பதற்கு ஏற்ப ஒவ்வொரு படத்திலும் வெற்றியை கொடுத்து வளர்ந்து வருகின்றார்.

அதன்படி அமரன் படத்தின் வெற்றிக்கு பிறகு தற்போதைய ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி என்ற திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் சிவகார்த்திகேயன் வெள்ளித்திரையில் நுழைந்த பிறகு தவறவிட்ட ஒன்பது படங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.

வழக்கு எண் 18/9:
கடந்த 2012 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் ஶ்ரீ நடித்த இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் சிவகார்த்திகேயன் தான் நடிக்க இருந்தார். சினிமாவிற்குள் நுழைந்த காலகட்டத்தில் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்த நிலையில் அந்த சமயத்தில் மெரினா, 3 மற்றும் மனம் கொத்தி பறவையாகிய திரைப்படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் இந்த திரைப்படத்தை சிவகார்த்திகேயன் தவறவிட்டார்.

பாண்டிய நாடு:
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான இந்த திரைப்படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட்டாகி இருந்த நிலையில் அப்போதே படத்திற்கு தயாரிப்பாளர் முதலில் கிடைக்காததால் கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் எதிர்நீச்சல் ஆகிய படங்களில் நடித்து வந்ததால் பாண்டியநாடு படத்தை வேண்டாம் என்று சிவகார்த்திகேயன் ஒதுக்கி விட்டாராம்.

காத்து வாக்குல ரெண்டு காதல்:
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிப்பில் வெளியான காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றி பெற்றது. ஆனால் இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க சிவகார்த்திகேயன் கமிட்டாகி இருந்த நிலையில் திரிஷா மற்றும் நயன்தாரா ஹீரோயின்களாக நடிக்க இருந்தனர். அப்போது டான் மற்றும் பிரின்ஸ் ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் பிசியாக இருந்ததால் இந்த திரைப்படத்திலிருந்து வெளியேறிவிட்டார்.
ராஜா ராணி:
கடந்த 2013 ஆம் ஆண்டு அட்லி இயக்குனராக அறிமுகமான ராஜா ராணி திரைப்படத்தில் ஜெய் மற்றும் ஆர்யா நடித்திருந்த நிலையில் இப்படத்தில் முதலில் ஜெய் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் காமெடிக்கு இந்த படத்தில் சந்தானம் தான் நடிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் கண்டிஷன் போட்ட நிலையில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்தால் நான் காமெடியனாக நடிக்க முடியாது என்று சந்தானம் கூறியதால் குளறுபடி ஏற்பட்டு சிவகார்த்திகேயன் சத்தம் இல்லாமல் இந்த படத்தில் இருந்து விலகி விட்டார்.
/tamil-ie/media/media_files/uploads/2018/02/70A8019.jpg)
கடைக்குட்டி சிங்கம்:
பாண்டியராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு கார்த்தி மற்றும் சத்யராஜ் நடிப்பில் குடும்ப படமாக வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க பாண்டியராஜ் அழைத்துள்ளார். ஆனால் சிவகார்த்திகேயன் மற்ற படங்களில் பிசியாக இருந்ததால் இந்த படத்தை தவற விட்டுவிட்டார்.

சூரரைப் போற்று:
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் சூரியா கேரக்டருக்கு முதலில் சிவகார்த்திகேயன் நடிக்க வேண்டியதாக இருந்தது. சில காரணங்களால் அவர் இந்த வாய்ப்பை தவற விட்டுவிட்ட நிலையில் விட்ட வாய்ப்பை மீண்டும் பிடிக்க தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் கூட்டணி அமைத்துள்ளார்.

டாடா:
கடந்த 2023 ஆம் ஆண்டு கவின் நடிப்பில் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற டாடா திரைப்படத்தில் கவின் கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயன் இந்த கேரக்டர் தனக்கு செட் ஆகாது என்று சொல்லி விலகி விட்டார்.

சித்தா:
அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த்தடிப்பில் வெளியான சித்தா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில்நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் இந்தத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து அவருக்கு தான் கதை சொல்லப்பட்டுள்ளது. ஆனால் கதையைக் கேட்ட பிறகு சிவகார்த்திகேயன் நோ சொல்லிவிட்டார்.

இந்தியன் 2:
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த வருடம் வெளியான இந்த திரைப்படம் எதிர்பார்க்காத அளவுக்கு தோல்வியை தழுவியது. இந்த படத்தில் முதலில் சித்தார்த்தா கேரக்டரில் சிவகார்த்திகேயன் நடிக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அந்த வாய்ப்பு கைநழுவி போய்விட்டது.
