விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் பணியாற்றும் முன்னணி நடிகராவார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து குறைந்த காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஆனவர். ஆரம்பத்தில் பின்னணியில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. 2010 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி. தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணும், நானும் ரவுடிதான், சேதுபதி, சூது கவ்வும், ஆரஞ்சு மிட்டாய் போன்ற பல திரைப்படங்களில் வயதானவர் நடுத்தர வயது தோற்றம் என பல தோற்றங்களை எடுத்து நடித்து பிரபலமான விஜய் சேதுபதி.

மாஸ்டர், விக்ரம் வேதா போன்ற திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி. இதனைத் தொடர்ந்து இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான விடுதலை 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டைப் பெற்றது. இது ஒரு பக்கம் இருக்க மறுப்பாக்கம் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டுக்களை பெற்றார். இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதனைத் தொடர்ந்து திரைப்படத்தில் தற்போது விஜய் சேதுபதி பிஸியாக நடித்து வருகின்றார். இப்படியான நிலையில் விஜய் சேதுபதி பற்றி பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியில், விஜய் சேதுபதி சார் கிட்ட எங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லாம இருக்கு என்று சொன்னேன். உடனே அவர் மாஸ்டர் என்னால முடிந்த உதவியை நான் செய்கிறேன் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார். நான் சொல்றேன் சார் நீங்க ஃப்ரீயா இருக்க டைம் சொல்லுங்க நான் வந்து பேசுறேன் என்று சொன்னேன். ஒரு நாள் ஏவிஎம் ஸ்டுடியோக்கு வர சொல்லியிருந்தார்.

அப்போ நிர்வாகிகள் சார்பாக சிலரை அழைத்துக் கொண்டு நான் சென்று இருந்தேன். அப்போது போன வருஷம் 25 லட்சம் ஆச்சு இந்த வருஷம் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எங்களுக்கு தேவைப்படுது என்று சொன்னேன். எவ்வளவு என்று கேட்டதும் 40 லட்சம் என்று கூறினேன். உடனே விஜய் சேதுபதி சார் நான் தரேன் என்று சொல்லிட்டார். அதைக் கேட்டதும் எங்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் மிகுந்த சந்தோசம். அவர் படத்தின் ப்ரொடக்ஷன் அப்போது சென்று கொண்டிருந்ததால் ஒரு வாரம் கழித்து வாங்க தரேன் என்று சொல்லிட்டாரு.
![]()
அது மாதிரி ஒரு வாரம் கழிச்சு அவருக்கு போன் பண்ணிட்டு அதே ஏவிஎம் ஸ்டூடியோவுக்கு சென்று இருந்தேன். அப்போ இந்த வருஷம் நான் 40 லட்சம் ரூபாய் தரேன் அடுத்த வருஷம் என்ன பண்ணுவீங்க என்று அவர் என்னிடம் கேட்டார். அதற்கு என் கிட்ட பதிலே இல்ல. அப்புறம் அந்த வருஷம் அவர்கிட்ட 40 லட்சம் ரூபாய் பணத்த வாங்கிட்டு அதுக்கப்புறம் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்காக இன்சூரன்ஸ் வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தபிறகு எங்களுக்காக கொஞ்சம் பணம் கொடுக்க ஆரம்பித்தார்கள் என்று சுப்ரீம் சுந்தர் பேசியுள்ளார்.
