சிறையில் இருந்து கொண்டே தன் காதலியான பிரபல நடிகைக்கு.. மிகப்பெரிய பரிசு கொடுத்த மோசடி மன்னன்.. !

By Nanthini on மாசி 15, 2025

Spread the love

பாலிவுட்டில் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் ஜாக்குலின் பெர்னாண்டஸ். இவர் சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிறைக்குச் சென்ற சுகேஷ் சந்திரசேகர் என்பவரை காதலித்து வந்ததாக கூறப்படுகின்றது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இருவரும் ஒன்றாக எடுத்துக் கொண்ட நெருக்கமான புகைப்படங்கள் தான் இதற்கு சாட்சி. இருந்தாலும் காதல் உறவு தொடர்பாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் தொடர்ந்து மௌனம் காத்து வருகின்றார்.

Hot Bombshell Jacqueline Fernandez's 112 Cr Valentine Gift from Jail

   

சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் ஜாக்குலின் பெயரும் அடிபட்டதால் விசாரணை அதிகாரிகள் பல வருடங்களாக இவரிடம் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். தனது காதலனிடமிருந்து இவர் கோடிக்கணக்கான மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் ஹைடெக் குதிரை உள்ளிட்ட கணக்கே வராத பரிசுகளை கொடுத்ததாகவும் கூறப்படுகின்றது.

   

நீ என் பொம்மை... என் சூப்பர் ஸ்டார்... நடிகை ஜாக்குலினுக்கு சிறையிலிருந்து  காதல் கடிதம் அனுப்பிய சுகேஷ்! | Sukesh chandrasekhar love letter to jacqueline  fernandez ...

 

 

தன் காதலன் ஜெயிலுக்குச் சென்ற பிறகு அவருக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது போல நடந்து கொள்ளும் இவருக்கு தொடர்ந்து கடிதங்கள் மூலமாகவும் பரிசு பொருள்கள் மூலமாகவும் தன்னுடைய காதலை சுகேஷ் வெளிப்படுத்தி வருகின்றார். இப்படியான நிலையில் காதலர் தினமான நேற்று சுகேஷ் சிறப்பு பரிசு ஒன்றை கொடுத்து தன் காதலியின் மனதை மாற்றும் முயற்சியில் மேற்கொண்டுள்ளார். அதாவது சிறையில் இருந்து கொண்டு தன் காதலிக்கு அவர் பரிசு கொடுத்துள்ளார். பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஜெட் விமானம் ஒன்றை தன்னுடைய காதல் பரிசாக அவர் வழங்கியுள்ளார்.

article_image4

அதேசமயம் தன் காதலிக்கு அவர் எழுதிய கடிதத்தில், அன்பே ஜாக்கி, இப்போதும் உன்னை பைத்தியம் போல் நான் காதலிக்கின்றேன். நமக்கு காதலர் தினம் என்பதை மிகவும் முக்கியம், இந்த நாளில் தான் நம் உறவு தொடங்கியது. இந்த வருடம் உனக்கு ஒரு Gulfstream ஜெட் விமானத்தை பரிசளிக்கின்றேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இடையில் சுகேஷ் ஒரு மோசடி பேர் வழியாக இருந்தாலும் அவருடைய காதல் உண்மையாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.