தமிழ் சினிமா முதல் பாலிவுட் வரை சினிமா பிரபலங்கள் பலரின் திருமணம் மற்றும் விவாகரத்து என்பது சாதாரணமான விஷயமாகத்தான் உள்ளது. திரைப்படத்தில் ஒன்றாக நடிக்கும் போது காதலித்து திருமணம் செய்து கொள்வதும் அதன் பிறகு விவாகரத்து பெறுவதும் சகஜமாகிவிட்டது. சமீபகாலமாகவே திரை பிரபலங்கள் மத்தியில் விவாகரத்து என்பது அதிகரித்து விட்டது. அதன்படி பாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வளம் வந்த நீலம் கோத்தாரி தனது திருமண மற்றும் விவாகரத்து பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்து பேசி உள்ளார். தன்னுடைய முதல் கணவரை பிரிந்து தற்போது மறுமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.

முதல் கணவரை பிரிந்த பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு பிரபல பாலிவுட் நடிகர் சமீர் சோனியை தான் இவர் மறுமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகள் இருவரும் சேர்ந்து கடந்த 2013 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள். இப்படியான நிலையில் நீலம் கோத்தாரி சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் முதல் திருமணம் செய்த பிறகு இங்கிலாந்துக்கு செல்ல வேண்டி இருந்தது. சில காரணங்களால் நான் அங்கேயே சில காலம் தங்கினேன்.

என்னுடைய முன்னாள் கணவர் என்னை இந்திய உடை அணிய வேண்டும், மாடர்ன் டிரஸ் போடக்கூடாது, அசைவம் சாப்பிடக்கூடாது மற்றும் மது அருந்தக்கூடாது என பல கண்டிஷன் போட்டார். அவர் சொல்வதை எல்லாம் நானும் சில காலம் செய்து வந்தேன். இவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்து சமயத்தில் ஒரு கட்டத்தில் அவர் என்னுடைய பெயரைக் கூட மாற்ற சொன்னார். ஒரு கட்டத்தில் நான் மொத்தமாக மாறி இருப்பதை பார்த்து நானே என்னை பார்த்து கேள்வி கேட்டு கொண்டேன். அதனால்தான் நான் நானாக இருக்க விரும்பி விவாகரத்து செய்து விட்டேன் என்று கண்ணீர் மல்க சமீபத்திய பேட்டியில் அவர் பேசியுள்ளார்.
