அஜித் மற்றும் விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் காமெடி வேடத்தில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகரும் தொகுப்பாளருமான தாடி பாலாஜி. முதலில் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர் அதன்பிறகு சின்னத்திரையில் நுழைந்து பிறகு சினிமாவில் ஜொலித்தவர். இவர் நித்யா என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகளும் உள்ளார். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றனர். இருவருமே தனித்தனியாக வாழ்ந்து வரும் நிலையில் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தனர். அதன் பிறகு இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இருவரும் தற்போது தனித்தனியாக தான் வாழ்ந்து வருகின்றனர்.

குடும்ப வாழ்க்கை இப்படி இருக்க சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் தாடி பாலாஜி விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார். இப்படியான நிலையில் தாடி பாலாஜி நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கியதும் அந்த கட்சியில் இணைந்தார். விஜயின் முதல் மாநாட்டில் கூட அவர் பங்கு பெற்று இருந்தார். அதே சமயம் விஜயின் கட்சிக்காக பல வேலைகளை செய்து கொண்டிருக்கும் தாடி பாலாஜி சமீபத்தில் விஜயின் உருவப்படத்தை நெஞ்சில் பச்சை குத்தியபடி வீடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். இதனைத் தொடர்ந்து தாடி பாலாஜி சமீபத்தில் ஒரு whatsapp ஸ்டேட்டஸ் வைத்திருந்த நிலையில் அது தொடர்பாக பலரும் விமர்சித்து வந்தனர்.

இப்படியான நிலையில் தாடி பாலாஜி தைப்பூசம் திருநாளான இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், என்னைப் பற்றி விமர்சிப்பவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் விஜய் கட்சியில் பணியாற்றிக் கொண்டிருக்க முக்கிய காரணம் எனக்கு பதவி தருவாங்க என்றோ அல்லது பொறுப்பு ஏதாவது கிடைக்கும் என்றோ நான் வேலை பார்க்கவில்லை. நான் விஜயின் தீவிர தொண்டன். அவர் எனக்காக நிறைய விஷயம் பண்ணி இருக்காரு. அதற்காக அவருக்கு நான் ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் தான் தற்போது ஓடிக் கொண்டிருக்கிறேன்.

அவருக்கு நல்லாவே தெரியும் எந்த நேரத்துல எனக்கு என்ன செய்ய வேண்டும் எது கொடுத்தான் நான் இன்னும் ஓடுவேன் என்று விஜய் சாருக்கு நல்லா தெரியும். என்னை பற்றி விமர்சிப்பவர்களுக்கு எல்லாம் நான் விளக்கம் கொடுக்க விரும்பவில்லை. விஜயின் சுற்றுப்பயணம் மார்ச் மாதம் தொடங்குகிறது. அதற்கு ஒரு தொண்டனாக என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று கூறி தாடி பாலாஜி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/reel/DF639rhRmg5/?igsh=MmZqanVhMWp3ZnMx
