2 லட்சம் சம்பளம் வாங்குறீங்க… ஆனா டாக்டரை காணும்… மருத்துவமனையில் மக்களுடன் இறங்கி சரமாரி கேள்வி கேட்ட கஞ்சா கருப்பு…

By admin on மாசி 11, 2025

Spread the love

கஞ்சா கருப்பு தமிழ் சினிமாவில் பணியாற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். இவரது இயற்பெயர் கருப்பு ராஜா என்பதாகும். பிதாமகன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார் கருப்பு. இந்த திரைப்படத்தில் அவர் கஞ்சா விற்பவறாக இருந்ததால் அதிலிருந்து இவர் பெயரை கஞ்சா கருப்பு என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

   

தொடர்ந்து ராம், அரையன் 305 ல் கடவுள், சுப்ரமணியபுரம், சண்டக்கோழி, உனக்கும் எனக்கும், சிவப்பதிகாரம், பருத்திவீரன், மதுரவீரன், அழகிய தமிழ் மகன், நாடோடிகள், மாஞ்சா வேலு, கற்றது களவு, வேங்கை போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானவர் கஞ்சா கருப்பு.

   

மதுரையை தமிழ் பேச்சு இவரது பேச்சுவழக்கில் நன்றாக தெரியும். அதுவே இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக ஆனது. இவர் பேசும் விதமும் நடிக்கும் விதமும் மக்களை கவரும் வகையில் இருந்தது. தற்போது சென்னை போரூர் சமூக நல அரசு மருத்துவமனைக்கு சென்ற கஞ்சா கருப்பு அங்கு டாக்டர் இல்லை என்பதால் மக்களுடன் இறங்கி போராட்டம் செய்ய போவதாக கூறியிருக்கிறார்.

 

கஞ்சா கருப்பு கூறியது என்னவென்றால், டாக்டர் காலையிலிருந்து இல்லை எட்டு மணியிலிருந்து ஏசி மட்டும்தான் ஓடிக் கொண்டிருக்கிறது. 2 லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்குகிறார்கள் ஆனால் டாக்டர் இருக்க மாட்டாங்களா. இங்க எத்தனை பேரு காத்திட்டு இருக்காங்க. சின்ன குழந்தையை வச்சிட்டு இருக்காங்க வயசானவங்க இருக்காங்க என்ன வேலை பாக்குறாங்க மதுரையில் எவ்வளவு நல்லா பாக்குறாங்க ஏன் சென்னையில இருக்க ஹாஸ்பிடல் மட்டும் இப்படி இருக்கு நான் மக்களுடன் இறங்கி போராட்டம் நடத்த போகிறேன் என்று பேசியிருக்கிறார் கஞ்சா கருப்பு.