தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் பிரபல வில்லனாக வளம் வந்தவர் நடிகர் மன்சூர் அலிகான். ஆர் கே செல்வமணி இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் அவரை வெகுஜனத்துக்கு பிடித்த நடிகராக்கியது. அதன் பிறகு ஆர் கே செல்வமணி விஜயகாந்த் கூட்டணியில் உருவான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் பிரதான வில்லனாக நடித்தார்.
வீரப்பனின் கதாபாத்திரத்தை அடியொட்டிய வீரபத்ரன் என்ற கதாபாத்திரத்தில் வித்தியாசமான நடிப்பை அவர் கேப்டன் பிரபாகரன் படத்தில் வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வெற்றியால் அவருக்கு 90 களில் பல படங்களில் வில்லனாக நடிக்க வாய்ப்பு வந்தது. அதன் பின்னர் 2000களுக்குப் பிறகு அவருக்கு நகைச்சுவையான வேடங்களும் கிடைக்க அதிலும் ஒரு கலக்கு கலக்கினார்.
புது தலைமுறை இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ‘தனக்கு மிகவும் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான்தான்’ என்று கூறினார். மன்சூர் அலிகான் சினிமா மட்டுமில்லாமல் அரசியலிலும் இறங்கி பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அதில் அவரால் பெரிதாக தாக்கம் செலுத்த முடியவில்லை.

இதற்கிடையில் த்ரிஷா பற்றி சர்ச்சையானக் கருத்தைப் பேசி அவர் சிக்கலில் மாட்டிக்கொண்டார். அதுமட்டுமில்லாமல் பல விஷயங்களில் இதுபோல கருத்து சொல்கிறேன் என்று உளறுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் அவர் பற்றி சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் ஒரு தகவலைப் பகிர்ந்துள்ளார்.
அதில் “மன்சூர் அலிகானுக்கு சினிமாவில் அறிமுகமான போதே வாய் அதிகம். அவர் ஒரு படத்தில் இதுபோல ஸ்டண்ட் நடிகர்களிடம் தேவையில்லாமல் பேசி வம்பு வளர்த்துள்ளார். அதனல் ஸ்டண்ட் காட்சியின் போது அவரை அவர்கள் போட்டு வகுந்துவிட்டார்கள் என்று சொல்வார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
