விஜயுடன் மோத தயாரான சிவகார்த்திகேயன்…அதை கேட்டதுமே தெறித்து ஓடிய SK…

By admin on மாசி 10, 2025

Spread the love

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகராக இருக்கிறார். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்து இன்று தனக்கான இடத்தை சினிமாவில் பிடித்திருக்கிறார். ஆரம்பத்தில் சின்னத்திரை விஜய் டிவியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்தார் சிவகார்த்திகேயன். அதன் மூலம் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

   

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயனாக அறிமுகமான சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் காமெடி கதை அம்சம் கொண்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதற்கு பிறகு வேலைக்காரன், சீமராஜா, மாவீரன், அயலான் போன்ற பல கமர்சியல் படங்களில் நடித்து புகழ்பெற்றார்.

   

கடந்த ஆண்டு தீபாவளிக்கு இவர் நடித்த அமரன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்தது. அதற்கு பிறகு பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அதன்படி சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

 

இந்தத் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாகிறது என்று கூறப்பட்டது. அதேபோல் நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படமும் தீபாவளிக்கு ரிலீஸ் என்று கூறப்பட்டு பிறகு அடுத்த ஆண்டு பொங்கல் ரிலீஸ் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் சிவகார்த்திகேயன் நடித்த பராசக்தி திரைப்படமும் ஜனநாயகன் படத்தோடு மோத போகிறது என்று சினிமா வட்டாரங்களில் பேச்சு நிலவியது. இதை அறிந்த சிவகார்த்திகேயன் அதிர்ச்சி அடைந்து ஐயையோ அந்த மாதிரி எல்லாம் நான் விஜய் சார் உடன் போட்டியிட மாட்டேன் என்று கூறிவிட்டாராம். அதனால் விரைவாக பராசக்தி படங்களின் பணிகளை முடித்து வருகிற தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய வேண்டும் என்று முயற்சித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.