இன்று சமூக வலைத்தளங்களில் பிரபலங்கள் பலரின் சிறு வயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன. அதில் சில பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்களை பார்க்கும்போது அட இவங்கதான் அவங்கள என்று சொல்லும் அளவுக்கு ஆச்சரியப்படும் வகையில் இருக்கும். அதன்படி சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் புகைப்படத்தில் குழந்தையாக இருக்கும் இந்த பிரபல பின்னணி பாடகி யார் என்று உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா.
/tamil-ie/media/media_files/uploads/2020/10/anuradha-sriram-rajini.jpg)
இவர் வேறு யாரும் இல்லை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தியன பழமொழிகளில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடிய பிரபல பாடகி அனுராதா ஸ்ரீ ராம் தான். 1970 ஆம் ஆண்டு பிறந்த இவர் சினிமா பின்னணி பாடகி மட்டுமல்லாமல் ஒரு கர்நாடக இசை பாடகியும் ஆவார். 1995ஆம் ஆண்டிலிருந்து சினிமா பாடல்களை பாடிவரும் அனுராதாவுக்கு தற்போது 54 வயதாகிறது.

இந்த நிலையில் அனுராதா ஸ்ரீராம் குழந்தையாக இருக்கும்போது நடிகர் ரஜினிகாந்த் அவரை கையில் தூக்கி வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்து முதலில் ஆச்சரியப்பட்டவர்கள் அந்த குழந்தையின் சிரிப்பை வைத்து அனுராதா என எளிதில் அடையாளம் கண்டுபிடித்து வருகிறார்கள். இந்த புகைப்படம் காளி திரைப்படத்தில் ரஜினியுடன் அனுராதா நடித்த போது எடுத்த புகைப்படம் ஆகும்.
