எம்ஜிஆர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலும் சினிமாவிலும் தனக்கென தனி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த எம்.ஜி.ஆர். பின்னாளில் நடிகராகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இவரது படங்களில் சமூக நீதி கருத்துக்கள் திராவிட சிந்தனைகள் ஆக்ஷன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர். இவரது படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார் எம்ஜிஆர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிடு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார். எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர் வாரி வழங்கும் வள்ளல் அதேபோல் சினிமா வட்டாரங்களிலும் பல நண்பர்களை கொண்டிருந்தவர்.
அப்படி சிவாஜி கணேசன் உடனும் நட்போடு இருந்தவர் எம்ஜிஆர். ஒருநாள் ஸ்டுடியோவில் எம்ஜிஆர் ஒரு அறையில் அமர்ந்திருக்க சூட்டிங்கை முடித்துவிட்டு மிகவும் களைப்பாக சிவாஜிகணேசன் எம்ஜிஆர் இருக்கும் அறைக்கு வந்தார். அப்போது சிவாஜிகணேசன் களைப்பாக இருப்பதை பார்த்தவுடன் எம்ஜிஆர் தேநீர் வழங்கினார். தேநீரை வாங்கி கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் குடித்துவிட்டு டம்ளரை வைத்து விட்டு சிவாஜி கணேசன் மறுபடியும் சூட்டிங் சென்று விட்டார்.
அப்போது எம்ஜிஆர் உடன் இருந்த ரவீந்தர் சிவாஜி மிச்சம் வைக்காமல் தேநீரை குடித்து விட்டாரே ஒரு சிலர் வளர்ந்த பிறகு பழசை மறந்து விடுவார்கள். பாதி தேநீர் குடித்துவிட்டு மீதியை வைத்து விடுவார்கள் என்று கேட்டிருக்கிறார். உடனே எம்ஜிஆர் சிவாஜி கணேசன் மற்றவர்கள் போல் அல்ல மிகவும் கஷ்டப்பட்டு தனது கடின உழைப்பு தன்னம்பிக்கையால் மேலே வந்திருக்கிறார். கஷ்டப்பட்டு உயர்ந்தவர்கள் யாரும் பழசை மறக்க மாட்டார்கள் என்று கூறியிருக்கிறார் எம்ஜிஆர்.