கோடை காலத்தில் AC ஓடினால் கரண்ட் பில் எகிறும் என்று கவலையா…? இந்த டிப்ஸை பின்பற்றினால் பணத்தை சேமிக்கலாம்…

By admin on மாசி 10, 2025

Spread the love

மெது மெதுவாக கோடை காலம் வர ஆரம்பித்துவிட்டது. இன்னும் ஒரு இரு மாதங்களில் சுட்டும் வெயில் அதிகரித்து விடும். இந்த நேரத்தில் அனைவரும் AC யை பயன்படுத்த விரும்புவார்கள். இந்த காலகட்டத்தில் பெரும்பாளானவர்கள் வீட்டிலும் AC இருக்கிறது. ஆனால் எல்லோருக்கும் கோடை காலத்தில் அதிக நேரம் AC பயன்படுத்தினால் கரண்ட் பில் கூடி விடுமே என்ற கவலை இருக்கும். அப்படி உங்கள் கரண்ட் பில் ஏறாமல் இருப்பதற்கான ஒரு சில வழிமுறைகளை இனி பார்ப்போம்.

   

மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்றால் தண்ணீர் பம்புகள் ஏசிகள் கூலர்கள் மின்விசிறிகள் போன்றவற்றை தேவைக்கேற்ப சரியாக பயன்படுத்த வேண்டும். நீங்கள் இல்லாத சமயத்தில் வேறொரு அறையில் மின்விசிறி ஓடுவது ஏசி ஓடுவது போன்றவற்றை தவிர்த்தால் மின்சாரத்தை சேமிக்க இயலும்.

   

தினமும் நீங்கள் உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படும் AC- க்கு என்று ஒரு நேரத்தை செட் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கரெக்டாக தினமும் ஒரே நேரத்தில் சிறிது பயன்படுத்திவிட்டு அதை அணைத்து வைக்கும் பொழுது மின்சாரம் ஏறாது. நேரத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் நாள் முழுவதும் பயன்படுத்தினால் மின்சார கட்டணம் உயரும். அதனால் உங்களுக்கு என்று ஒரு தனி நேரத்தை வைத்து அதன்படி தினமும் பின்பற்றுங்கள்.

 

அதேபோல் நீங்கள் AC யை பயன்படுத்தும் போது கவனிக்க வேண்டியதை என்னவென்றால் நீங்கள் புது ஏசி வாங்கும்போதே இன்வெர்ட்டர் மற்றும் இன்வெர்ட்டர் இல்லாத ஏசி மார்க்கெட்டில் இருக்கும். அதில் இன்வெர்ட்டர் உள்ள ஏசியை நீங்கள் பார்த்து வாங்க வேண்டும். ஏனென்றால் இன்வெர்டர் AC மின்சாரத்தை சேமிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அதேபோல் AC கம்ப்ரஸர் தேர்வும் மிக முக்கியமானது. AC கம்ப்ரஸர் அதிக மின்சாரத்தை பயன்படுத்தும் என்பதால் அதில் கவனமாக இருக்க வேண்டும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றும்போது கோடையில் நீங்கள் AC பயன்படுத்தினாலும் கூட உங்கள் மின் கட்டணம் அதிகமாகவதை தடுக்க முடியும்.