லூதியானாவைச் சேர்ந்த வக்கீல் ராஜேஷ் கண்ணா என்பவர் மோகித் சுக்லா என்பவருக்கு எதிராக ரூ.10 லட்சம் மோசடி வழக்கை தொடர்ந்த நிலையில் முதலீடு செய்ய தூண்டியதாக நடிகர் சோனு சூட் மீதும் வழக்கு தொடரப்பட்டது. பாலிவுட்டில் முன்னணி நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் தான் சோனு சூட். மோசடி வழக்கு தொடர்பாக இவரை கைது செய்ய பஞ்சாப் நீதிமன்றம் கைதுவாரண்ட் பிறப்பித்துள்ளது. லூதியானா நீதித்துறை நடுவர் ராமன்பிரீத் கவுர் இந்த வாரத்தை பிறப்பித்துள்ளார்.

லூதியானாவை சேர்ந்த வழக்கறிஞர் ரமேஷ் கண்ணா, மோகித் சுக்லா என்பவர் மீது 10 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக வழக்கு தொடர்ந்து இருந்தார். அந்த வழக்கில் போலி ரிஜிக்கா நாணயத்தில் முதலீடு செய்ய தன்னை ஈர்த்ததாக அவர் கூறியுள்ளார். இந்த வழக்கில் நடிகர் சோனு சூட்டுக்கு தொடர்பு இருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணையில் சாட்சி அளிக்க சோனு சூட் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட நிலையில் அவர் ஆஜராக தவறிவிட்டார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு கைது வாராண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், சோனு சூட் முறையாக சமன்கள் அல்லது வாரண்ட் அனுப்பப்பட்டும் ஆஜராக தவறிவிட்டார். அவரை கைது செய்து நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்று நீதிமன்ற முத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வழக்கு விசாரணை பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
