அங்க போய் பாரு.. கமல் நடிச்சிகிட்டு இருக்கான்… ரஜினிகாந்தை திட்டிய பாலச்சந்தர்… எதற்காக தெரியுமா?

By vinoth on மாசி 5, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அவர் படங்கள் இன்றளவும் வசூல் சாதனை படைத்து வருகின்றன. சமீபத்தில் அவர் நடித்த ஜெயிலர் திரைப்படம் 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. 1975 ஆம் ஆண்டு வெளியான அபூர்வ ராகங்கள் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ரஜினிகாந்த். அந்த படத்தில் ஒரு மிகச்சிறிய வேடமே அவருக்குக் கொடுக்கப்பட்டு இருந்தது.

அதன் பிறகு மூன்று முடிச்சு உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாக நடித்து தனக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் தொட்டதெல்லாம் வெற்றிதான். அதிலிருந்து இப்போது வரை தமிழ் சினிமாவின் மாஸ் மகாராஜாவாக இருக்கிறார். தற்போது தன்னுடைய 73 வயதிலும் தன்னுடைய அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய், அஜித் ஆகியோருக்கு போட்டியாக களத்தில் நிற்கிறார்.

   

ரஜினிகாந்த் சினிமாவில் அறிமுகமான போது வில்லன் கதாபாத்திரத்தில்தான் நடித்து வந்தார். அதில் பெரும்பாலான படங்கள் கமல்ஹாசனுக்கு வில்லனாக நடித்தார். அவர்கள் கூட்டணியில் உருவான ஐந்து படங்களும் இன்றளவும் ரசிகர்களால் பார்த்து ரசிக்கப்படுகின்றன. வில்லனாக நடித்தாலும் ரஜினிகாந்த் தனக்கென்று ஒரு மிடுக்கான பாணியை வைத்திருந்தார். அதுதான் ரசிகர்களைப் பெரிய அளவில் கவர்ந்தது.

   

 

அதிலிருந்து கதாநாயகனாக மாறிய ரஜினிகாந்த் அதிலும் ஜொலித்தார். சில ஆண்டுகளிலேயே கதாநாயகனாக தன்னை தக்கவைத்துக் கொண்ட ரஜினிகாந்த் வணிக மதிப்பில் கமல்ஹாசனை விஞ்சினார். அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கு மேலாக இருவரும் தமிழ் சினிமாவின் இரு உச்ச நட்சத்திரங்களாக இருந்து வருகின்றனர். இருவரும் மற்றவரின் நடிப்பை புகழ்ந்து பல மேடைகளில் பேசியுள்ளனர்.

அப்படி ஒரு மேடையில் ரஜினிகாந்த் பேசும்போது “ஆரம்பகாலத்தில் நானும் கமலும் பாலச்சந்தர் சார் படங்களில் இணைந்து நடிக்கும்போது நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து நழுவி தம் அடிக்கப் போனால், வந்ததும் பாலச்சந்தர் சார் என்னைத் திட்டுவார். எங்கடா போன? … கமல் அங்க நடிச்சிட்டு  இருக்கான். போய் பாரு.. நடிப்பக் கத்துக்க” என சொல்வார்..” என கமல்ஹாசனை சிலாகித்துப் பேசியுள்ளார்.