படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அதனுடைய சாட்டிலைட் வியாபாரம், டிஜிட்டல் வியாபாரம், அட்வான்ஸ் புக்கிங் என எல்லாமே கணக்கிடப்பட்டு முடிக்கப்படுகிறது. இதிலிருந்து தான் ஹீரோக்களுடைய செல்வாக்கும் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் முன்பதிவில் அதிக டிக்கெட் விற்பனையான படங்கள் குறித்து பார்க்கலாம்.

அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ரிலீசான புஷ்பா 2. இந்த திரைப்படம் தென்னிந்தியாவில் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இந்த படம் முன்பதிவின் பொழுது 30 லட்சம் டிக்கெட் விற்பனையாகி முதலிடத்தில் உள்ளது.

மாஸ்டருக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் கூட்டணயில் உருவான திரைப்படம் லியோ என்பதால் இதன் மீது எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது. முன்பதிவுவின் போது 22.86 லட்சம் டிக்கெட் விற்பனையாகியது.

பிரபாஸ், அமிதாபச்சன் மற்றும் கமலஹாசன் கூட்டணியில் உருவான படம் கல்கி. விஷ்ணு அவதாரத்தை மையமாக எடுத்துக்கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் முன்பதிவில் 17.26 லட்சம் டிக்கெட் விற்பனையாக இருக்கிறது.
/indian-express-tamil/media/media_files/bQdHQf0ddT2cDZNIvYpS.jpg)
சலார் படம் நடிகர் பிரபாஸுக்கு எதிர் பார்த்த அளவுக்கான பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இருந்தாலும் முன்பதிவின் போது 16.69 லட்சம் டிக்கெட் விற்பனையாகி இருந்தது.
அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் முன் பதிவின்போது 16.53 லட்சம் டிக்கெட் விற்பனையாக இருக்கிறது.

ஜூனியர் என்டிஆர் க்கு மிகப்பெரிய வெற்றிய கொடுத்த படம் தேவரா. இந்த படத்தின் டிக்கெட் முன்பதிவு கிட்டத்தட்ட 13 .19 லட்சம் விற்பனை ஆகி உள்ளது.
