ஒவ்வொருவருக்கும் கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஒரு சிலர் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்று விரும்புவர். கையில் பணம் வைத்திருப்பவர்கள் சொந்த தொழிலில் முதலீடு செய்து அதன் மூலம் முன்னுக்கு வரலாம் என்று நினைப்பார்கள். பணம் இல்லாதவர்களுக்கு சொந்த தொழில் செய்வது என்பது சற்று கடினமான காரியம் தான். ஆனால் ஒரு இளைஞர் எந்த ஒரு முதலீடும் இல்லாமல் ரூ 70,000 பணம் சம்பாதித்து இருக்கிறார். அதை பற்றி இனி காண்போம்.

உத்திரபிரதேசத்தில் தற்போது மிக விமர்சையாக நடந்து வரும் ஒரு திருவிழா தான் மகா கும்பமேளா. 144 வருடத்திற்கு ஒருமுறை நடக்கும் பெரிய பண்டிகை இந்த மகா கும்பமேளா. கோடிக்கணக்கான மக்கள் அன்றாடம் இந்த விழாவில் கலந்துகொண்டு கங்கையில் புனித நீராடி வருகின்றனர். மகா கும்பமேளா நேரத்தில் அங்கிருக்கும் வணிகர்களுக்கு ஒரு ஜாக்பாட் ஆன நேரம் தான். எல்லா பொருட்களுமே நன்றாக விற்பனை நடைபெறும். அந்த மகா கும்பமேளாவில் தான் ஒரு பைசா முதலீடு இல்லாமல் ஒரு இளைஞர் குச்சியை விற்றே ஆயிரக்கணக்கில் சம்பாதித்துக் கொண்டு இருக்கிறார்.

இது பற்றிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி இருக்கிறது. அந்த இளைஞர் தான் வேப்பங்குச்சியை விற்பதாகவும் இந்த வேப்பங்குச்சியை விற்பதன் மூலம் 70,000 ரூபாய் வரை சம்பாதித்ததாக அவர் கூறியிருக்கிறார். மேலும் இந்த ஐடியாவை கொடுத்தது தனது காதலிதான் அவருக்கு தான் நன்றி கூற வேண்டும் என்றும் உருக்கமாக பேசி இருக்கிறார். ஒரு பைசா கூட முதலீடு இல்லாமல் வேப்பங்குச்சியை விற்பதன் மூலம் லாபம் ஈட்டிய இந்த இளைஞர் இது போல கூட செய்யலாமா என்று செய்து முன்னேறி காட்டியுள்ளார்.
